முடிவுக்கு வரும் போர்.. இறங்கி வரும் இஸ்ரேல் பிரதமர்! மொசாட் தலைவருக்கு பறந்த உத்தரவு! ஹமாஸ் நிம்மதி
ஜெருசலேம்: மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஹாமஸ் மோதல் சுமார் ஓராண்டிற்கு மேல் நடந்து வருகிறது. இதனால் மோதல் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் மெல்லப் பரவுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் ஹாமஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கடந்தாண்டு இரு தரப்பிற்கும் இடையே மிகப் பெரியளவில் மோதல் வெடித்தது. தொடர்ந்து ஹமாஸ் மீது போரை அறிவித்த இஸ்ரேல் காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

சுமார் ஓராண்டிற்கும் மேலாக இந்த மோதல் தொடர்கிறது. இடையில் ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவே அங்கு நிலைமை மேலும் மோசமானது. போர் நிறுத்தத்திற்கு ஓராண்டாக முயற்சி நடந்து வருகிறது.
பேச்சுவார்த்தை: இதுவரை இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்குப் பிடிகொடுக்காமலேயே இருந்து வந்தது. இருப்பினும், இப்போது ஹமாஸ் தலைவர் சின்வார், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா என இருவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலைமை மெல்ல மாறுகிறது. காசாவில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், அதில் இஸ்ரேல் சார்பில் அந்நாட்டு உளவு படை தலைவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல போர் நிறுத்தத்தில் உடன்பாடு ஏற்பட்டால் தாக்குதலை நிறுத்த போவதாக ஹமாஸும் அறிவித்துள்ளது.
ஹமாஸ் தரப்பு: ஹமாஸ் தரப்பு மேலும் கூறுகையில், "எகிப்து தலைநகர் கெய்ரோவில் காசா போர்நிறுத்தம் குறித்து பேசுச்வார்த்தை நடைபெறும். இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யச் சம்மதித்தால் போதும்.. நாங்கள் தாக்குதலை நிறுத்த தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சில கோரிக்கைகள் தான்.. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் வேண்டும். காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும். இந்த அமைதி பேச்சுவார்த்தையில் எகிப்து முக்கிய பங்கு வகித்துள்ளது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்" என்றார்.
அதேபோல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இந்த போர் நிறுத்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "காசாவில் பயங்கரவாதிகள் பிடியில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தத்தை எட்ட எகிப்து உதவியுள்ளது. அதற்கு நன்றி" என்று குறிப்பிட்டார்.
உளவு படைத் தலைவர்: இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அந்நாட்டு உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் தலைவரைப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது. எகிப்துடன் கத்தாரும் சமாதான முயற்சிகளைச் செய்து வரும் நிலையில், மெசாட் தலைவர் அங்குச் சென்று அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.
கோரிக்கைகள்: ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், அதில் உடன்பாடு ஏற்பட்டால் போர் முழுமையாக முடிவுக்கு வரும். ஹமாஸ் தரப்பில் முழுமையாகத் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். காசா முற்றுகையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரைப் பிணையக் கைதிகளை முழுமையாக மீட்பதிலேயே கவனம் செலுத்தும்.
காசாவில் நிலைமை மோசமாகி வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வரவே ஹமாஸ் விரும்பும்.. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த கட்ட தலைவர்களையும் இஸ்ரேல் காலி செய்துவிட்டது. எனவே, இஸ்ரேலும் போரை முடித்துக் கொள்ளவே விரும்பும் எனத் தெரிகிறது.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications