"அதிகாலை அலறிய சைரன்கள்.." லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்.. வெடிக்கும் உலக போர்? பரபரப்பு
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஏற்கனவே பல மாதமாக நடந்து வரும் நிலையில், இப்போது திடீரென லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும், இதனால் அங்கே அவசர நிலையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதிகளில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. ஹமாஸை முழுமையாக அழிப்போம் எனச் சொல்லி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேநேரம் ஹமாஸ் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இதற்கிடையே இப்போது அங்கே இந்த மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.
தாக்குதல்: ஈரான் ஆதரவு பெற்று லெபனானில் இயங்கும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் ராணுவம் திடீரென தாக்குதலை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், அதற்குப் பதிலடியாகவே இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
அவசர நிலை: லெபனான் நாட்டில் பதுங்கி இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது சுமார் 150க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளன. இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு சைரன்கள் அலறி இருக்கிறது. தங்களைத் தற்காத்துக் கொள்ளவே இப்போது தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல் நாட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அவசர நிலையும் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் தொடர் தாக்குதல் நடத்த ஹிஸ்புல்லா தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இதற்குப் பதிலடி தரும் விதமாகவே தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து 40 ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
போலியோ பாதிப்பை மீண்டும் உருவாக்கிய போர்.. ஆபத்தில் ஆயிரக்கணக்கான காசா குழந்தைகள்! ஐநா எச்சரிக்கை
எங்கு தாக்குதல்: இதைத் தற்காப்புச் செயல் என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாலேயே நாங்கள் இந்த தற்காப்புச் செயலில் ஈடுபட்டோம். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி இருக்கிறோம். எங்கிருந்து அவர்கள் இஸ்ரேலைத் தாக்கத் திட்டமிட்டு இருந்தார்களோ அந்த இலக்குகளை மட்டுமே தாக்கியுள்ளோம்" என்றார்.
இந்தத் தாக்குதல் காரணமாக தெற்கு லெபனான் பகுதிகளில் வசிப்பவர்கள், உடனடியாக அங்கிருந்து கிளம்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கி இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடங்களில் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பரபரப்பு: ஏற்கனவே, இஸ்ரேலில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இன்றைய தினம் நெதன்யாகு தலைமையில் இஸ்ரேல் அமைச்சரவை நடக்கிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றே தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்களால் எங்கு அப்பகுதியில் பிராந்திய போர் வெடிக்குமோ என்ற அச்சமும் பலருக்கும் எழுந்துள்ளது.
-
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications