Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ரொம்ப மோசம்!" சத்தமின்றி இஸ்ரேல் செய்த காரியம்! காசா எல்லையில் பரபர மாற்றம்! பதறும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் போர் தொடரும் நிலையில், காசா மீது முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் செய்து முடித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்தே வருகிறது. ஹமாஸ் படை கடந்த அக்.7ஆம் தேதி தாக்குதலை நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேலும் கடுமையான பதிலடியைக் கொடுத்து வருகிறது.

 Israel is completely ready for ground invasion as it completes the preparation

காசா பகுதியின் மீது தொடர்ச்சியாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அங்கே ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அங்கே நிலைமை மோசமடைந்து வருகிறது.

இஸ்ரேல் யுத்தம்: இப்படி இரு தரப்பிற்கும் இடையே தாக்குதல் தொடர்ந்து வருகிறது. ஏவுகணை தாக்குதல் மட்டுமின்றி முழு வீச்சில் காசா மீது படையெடுக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியாகி வருகிறது. இதை உறுதி செய்யும் விதமாக தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஒரு மசூதி வளாகத்தில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அந்த மசூதியைப் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தத் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாகவும் இதன் காரணமாகவே தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது. இதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

படையெடுப்பிற்கு ரெடி: இஸ்ரேல் ஹமாஸ் போர் 16ஆவது நாளாகத் தொடரும் நிலையில், இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பை நடத்தத் தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது. காசா எல்லையில் அதிகப்படியான வீரர்கள் தங்க ஏதுவாக ஏவுதளங்களை அமைத்துள்ளது. மேலும், தாக்குதலை ஆரம்பிக்க ஏதுவாக அங்கே பல ஆயிரம் வீரர்களையும் குவித்துள்ளது. காசாவில் முழு வீச்சில் தாக்குதலை நடத்த இஸ்ரேல் முழுமையாக ரெடியாகிவிட்டதையே இது குறிக்கிறது.

அதேநேரம் மேற்குலக நாடுகள் இஸ்ரேல் படையெடுப்பை நடத்தக் கூடாது என்றே எச்சரித்து வருகிறது. படையெடுப்பை ஆரம்பித்தால் அது போரை விரிவடையச் செய்யும் என்பதால் அமெரிக்கா எச்சரித்தே வருகிறது. குறிப்பாகச் சமீபத்தில் இஸ்ரேல் சென்று திரும்பிய அமெரிக்க அதிபர் பைடனும் கூட, காசா மீது இஸ்ரேல் படையெடுப்பை நடத்தக் கூடாது என்பது போலவே கூறியிருந்தார். என்ன தான் அமெரிக்கா இப்படிக் கூறினாலும் இஸ்ரேல் படையெடுப்பிற்குத் தேவையான பணிகளை முடித்துவிட்டதாகவே கூறப்படுகிறது.

 Israel is completely ready for ground invasion as it completes the preparation

ஆபத்து: காசா மீது இஸ்ரேல் படையெடுப்பை ஆரம்பித்தால் இதனால் மோதல் அண்டை நாடுகளுக்கும் பரவும் ஆபத்து இருக்கவே செய்கிறது. இதற்கிடையே இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பித்துப் படையெடுப்பைத் தொடங்கினால் போரில் சேரப்போவதாக ஹிஸ்புல்லா எச்சரித்துள்ளது. காசா பகுதியில் படையெடுப்பை ஆரம்பித்தால் இஸ்ரேல் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று ஹிஸ்புல்ல உயர் அதிகாரி எச்சரித்துள்ளார். லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா நிலைமை கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இது தொடர்பாக ஹிஸ்புல்லாவின் துணைத் தலைவரான ஷேக் நைம் கஸ்ஸெம் கூறுகையில், "நாங்கள் இஸ்ரேல் ராணுவத்தைப் பலவீனப்படுத்த முயல்கிறோம்.. நாங்கள் அனைத்திற்கும் ரெடி என்பதை அவர்களுக்குக் காட்டுகிறோம்.. படையெடுப்பை ஆரம்பித்தால் இந்த யுத்தத்தில் வெறு வழியின்றி ஹிஸ்புல்லாவும் ஈடுபடும்" என்று அவர் தெரிவித்தார். இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், மற்றொரு பக்கம் லெபனான் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலுக்குத் தலைவலியைக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+