துரத்தும் மன அழுத்தம்.. தற்கொலை எண்ணம்.. காசாவில் இருந்து திரும்பிய.. இஸ்ரேல் வீரர்களுக்கு PTSD!

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: காஸாவில் போர் நடத்தி நாடு திரும்பிய பல இஸ்ரேல் வீரர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு உள்ளதாம்.

கடந்த ஓராண்டில்.. காசாவில் இஸ்ரேலின் போர் காரணமாக 42,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 30 சதவிகிதம் பேருக்கும் அதிகமாக குழந்தைகள் என்று கூறப்படுகிறது. பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின்படி, இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

israel palestine israel palestine war

ஹமாஸ் சார்பாக இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரைக் கொன்று உள்ளனர். 250 க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகக் கைப்பற்றி உள்ளனர். கடந்த ஆண்டு தீவிரம் அடைந்த போர் உச்சம் அடைந்து உள்ளது. கிட்டத்தட்ட 3 ஆயிரம் வீரர்கள் சுழற்சி முறையில் இஸ்ரேல் சார்பாக இந்த போரில் களமிறக்கப்பட்டு காஸாவில் தாக்கி வருகின்றனர்.

இந்த காசா போரில் ஈடுபட்ட இஸ்ரேல் வீரர்களுக்கு PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு உள்ளதாம். இதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன.

1. இஸ்ரேல் சார்பாக காஸாவில் குழந்தைகள் பலர் கொலை செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

2. பல குழந்தைகள் துப்பாக்கியால் நேரடியாக சுடப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

3. இப்படிப்பட்ட கொலைகளை செய்த வீரர்கள் நாட்டிற்கு திரும்பியதும் அது தொடர்பான அழுத்தம் இருக்கும். அதை பற்றிய மன அழுத்தம் குற்ற உணர்ச்சி இருக்கும்.

4. அமெரிக்கா ஈராக்கில் போர் நடத்திய போதும்.. ஆப்கானிஸ்தானில் போர் நடத்திய போதும் இப்படிப்பதான் அமெரிக்க வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.

5. போர் முடிந்து வந்த அமெரிக்க வீரர்கள் PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

6. இதில் பலர் கொலைகாரர்களாக.. துப்பாக்கியால் பொது இடங்களில் சுடக்கூடியவர்களாக மாறினர்.

7. இஸ்ரேலில் இதேபோன்ற நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது. இஸ்ரேல் வீரர்கள் இதேபோல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

8. இதுவரை பல நூறு வீரர்கள் இஸ்ரேலில் PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர் என்று சர்வதேச ஊடகமான சிஎன்என் தெரிவித்துள்ளது.

9. பலருக்கும் தூக்கம் இன்மை, கோபம், சாப்பிட, செயல்பட விருப்பம் இல்லாத செயல், கெட்ட கனவு என்று மன ரீதியாக கடுமையான அழுத்தம் ஏற்பட்டு உள்ளதாம்.

10. முக்கியமாக பல வீரர்களுக்கு தற்கொலை எண்ணம் உள்ளது. சிலர் ஏற்கனவே தற்கொலை முயற்சிகளை செய்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

லீக்கான தகவல்: இஸ்ரேலுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்க.. இன்னொரு பிரச்சனையும் வந்துள்ளது.. அதன்படி இஸ்ரேல் ஈரான் மீது எப்படி பதிலடி கொடுக்கும்.. எப்போது பதிலடி கொடுக்கும் என்பது தொடர்பான உளவு தகவல்கள் நேற்று முதல்நாள் லீக்கானது. ஈரான் மீது இஸ்ரேல் என்ன மாதிரியான பதிலடி தரப்போகிறது என்பது தொடர்பான உளவுத்துறை ஆவணங்கள் சில கசிந்து உள்ளன.

இஸ்ரேலின் பிளான் தொடர்பாக இரண்டு அமெரிக்க உளவுத்துறை ஆவணங்கள் கசிந்துள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆவணங்கள்.. அமெரிக்கா முழுக்க டெலிகிராமில் கசிந்து உள்ளன. ஈரானுக்கு ஆதரவான டெலிகிராம் பக்கங்கள் இதை கசியவிட்டுள்ளன.

நேஷனல் ஜியோஸ்பேஷியல்-இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (NGA) க்கு சொந்தமான இந்த ஆவணங்கள் கசிந்து உள்ளன. அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மூலம் இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சிகள் மற்றும் அவர்கள் ராணுவத்தின் தயார்நிலை பற்றிய பல்வேறு தகவல்கள் இந்த உளவு செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த படங்கள்தான் லீக்காகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+