"இன்றிரவு நாங்கள் நடத்தும் தாக்குதல்!" ஓப்பனாக எச்சரித்த இஸ்ரேல்.. என்ன நடக்குமோ? பதறும் உலக நாடுகள்
அவிவ்: காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அந்நாட்டின் அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான தாக்குதல் மூன்று வாரங்களாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் படை மோசமான தாக்குதலை நடத்தியது. மேலும் பலரையும் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது.

இதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. காசா மீது இஸ்ரேல் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் யுத்தம்: இதற்கிடையே காசா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை இரவு காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் காசாவில் இலக்குகளைக் குறிவைத்து சரமாரியாகத் தாக்குதல் நடத்தின. சில மணி நேரம் தாக்குதலை நடத்திவிட்டு, அவை மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பிவிட்டன. நேற்றிரவும் கூட காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.
காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பிக்க உள்ளதாக எச்சரித்து வரும் நிலையில், அதற்கான ஆயுத பணிகளாகவே இது பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேலிய ராணுவம் காசாவில் அதன் தரை வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த உள்ளதாக எச்சரித்துள்ளது. இப்போது காசா வடக்கு பகுதியில் நடத்தும் தாக்குதலை விட வரும் காலத்தில் பெரிய தாக்குதல்களை நடத்த உள்ளதாகவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
தீவிரமடையும் தாக்குதல்: இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய பீரங்கிகள் காசாவுக்குள் நுழைந்து சரமாரியாகத் தாக்குதல் நடத்துவதையும் அதைத் தொடர்ந்து ஏற்படும் பயங்கர வெடி சத்தங்கள் கேட்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், "கடந்த சில நாட்களில் காசா பகுதியில் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகிறோம். இவை இன்றிரவு தீவிரமாக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். இன்று இரவு முதல் காசா தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்த இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் பாதிப்புகள் மேலும் மோசமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
திடீர் முடிவு ஏன்: இஸ்ரேல் நாட்டில் போர் காரணமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில்தான் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஹமாஸ் வசம் பிணையக் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கும் முயற்சியிலும் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. தாக்குதலை ஒரு பக்கம் தீவிரப்படுத்தும் இஸ்ரேல், மறுபுறம் பிணையக் கைதிகளை விடுவிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.
தொலைத்தொடர்பு பாதிப்பு: போர் 3ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், காசாவில் இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் முடங்கின. இதனால் அங்குள்ள 23 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஹமாஸ் சுரங்கங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல்களை நடத்தி வருகிறது.. வடக்கு காசா பகுதியில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த உள்ளதாகவும் இதனால் பாலஸ்தீனியர்கள் தெற்கு காசாவை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற இஸ்ரேல் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications