இஸ்ரேல் மீது 300 ராக்கெட்டுகளை ஏவிய போராளி குழு.. மீண்டும் ரத்த பூமியாகும் காஸா.. பகீர் வீடியோ!
இஸ்ரேல் மற்றும் காஸாவில் உள்ள போராளிகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போர் உருவாகி உள்ளது.
Recommended Video

காஸா: இஸ்ரேல் ராணுவம் மற்றும் காஸாவில் உள்ள போராளிகளுக்கு இடையே மிகப்பெரிய அளவில் போர் உருவாகி உள்ளது.
கடந்த சனிக்கிழமையில் இருந்து இரண்டு தரப்பினரும் மாற்றி மாற்றி தங்களுக்குள் தாக்கிக் கொள்கிறார்கள். இஸ்ரேலுக்கு அருகேவும், பாலஸ்தீனத்திற்கு இடப்புறமும் இருக்கும் காசா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக காஸாவில் செயல்படும் ஹமாஸ் போராளி குழு மீண்டும் தங்களது வலிமையை காஸாவில் காட்ட தொடங்கி இருக்கிறது. ஹமாஸ் போராளி குழு பாலஸ்தீன அரசால் ஆதரவு அளிக்கப்படும் இயக்கம் ஆகும். இதனால் மிகப்பெரிய போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
|
திடீர் தாக்குதல்
கடந்த சனிக்கிழமைதான் முதல் பெரும் தாக்குதல் நடந்துள்ளது. காஸாவிற்குள் இஸ்ரேல் படை எந்த அறிவிப்பும் இன்றி உள்ளே நுழைந்து இருக்கிறது. உள்ளே நுழைந்த இஸ்ரேல் படை காஸா விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை கொலை செய்துள்ளது. அதேபோல் முக்கியமான ஹமாஸ் வீரர்கள் சிலரும் மரணம் அடைந்துள்ளனர்.
|
பதில் தாக்குதல்
இதையடுத்துதான் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். நேற்று ஒரே நாளில் 300 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி இருக்கிறார்கள் போராளிகள். இஸ்ரேலின் பெரும்பாலான பகுதிகள் இதனால் சேதம் அடைந்து இருக்கிறது. மக்கள் வசிக்கும் பகுதியிலும் இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது.
|
என்ன வீடியோ
இந்த ராக்கெட் ஏவும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இஸ்ரேலில் எப்படி ராக்கெட் வந்தது விழுந்தது என்று வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ பார்க்கவே பதற வைக்கும் வகையில் உள்ளது.
|
மீண்டும் தாக்கினார்கள்
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் படைகள் மீண்டும் தாக்கி இருக்கிறார்கள். நேற்று மாலை தொடங்கிய தாக்குதல் இப்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டு தரப்பும் மாற்றி மாற்றி தங்களுக்குள் தாக்கிக் கொள்கிறார்கள்.
|
எத்தனை பேர் பலி
இதில் ஹமாஸ் குழுவிற்கு சொந்தமான பெரிய தொலைக்காட்சி நிறுவனம் காஸாவில் தகர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடர் தாக்குதலில் இரண்டு தரப்பையும் சேர்த்து 50 பேர் வரை மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே மீண்டும் போரை உருவாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications