பெகாசஸ் விவகாரம்.. உக்ரைன் போருக்கு இடையில் திடீரென இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர்! என்ன காரணம்?
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் முதல் முறையாக ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இஸ்ரேலுடனான நட்புறவு அதிகரித்தது.
சர்வதேச அரங்கில் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் இந்திய பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர்களாக அறியப்பட்டனர்.

இஸ்ரேலின் புதிய பிரதமர்
இஸ்ரேலை கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நேதன்யாகு கடந்த முறை நடந்த தேர்தலில் பெரும்பான்மை பெறாமலேயே ஆட்சியை தொடர்ந்து வந்தார். இதற்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நஃப்தாலி பென்னட் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தியாவுக்கு அழைத்த மோடி
இருப்பினும் இந்தியா இஸ்ரேல் உடனான நட்புறவு தொடர்ந்து வருகிறது. ஸ்காட்லாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டும் முதல்முறையாக நேரில் சந்தித்து பேசினர். அப்போது நஃப்தாலி பென்னட் இந்தியா வர வேண்டும் என பிரதமர் மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர்
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட நஃப்தாலி பென்னட் ஏப்ரல் 2 ஆம் தேதி அரசுமுறை பயணமாக முதல் தடவை இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் இஸ்ரேல் பிரதமர் பென்னட் இருநாட்டு நல்லுறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய யூதர்களை சந்திக்கும் இஸ்ரேல் பிரதமர்
பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், சர்வதேச பயங்கரவாதம், உக்ரைன் - ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அரசு அதிகாரிகளை இஸ்ரேல் பிரதமர் சந்திக்க இருப்பதாகவும், அதன் பின்னர் இந்தியாவில் உள்ள யூத சமுதாய மக்களுடன் அவர் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

"எனது நண்பர் மோடியின் அழைப்பை ஏற்று வருகிறேன்"
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் அரசு குறிப்பில், "எனது நண்பர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று முதல்முறையாக இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் ஒன்றாக இணைந்து இருநாட்டு நல்லுறவுக்கு வழிவகுப்போம்." எனத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு இருநாடுகள் இடையிலான 30 ஆண்டுகால நல்லுறவை வலுப்படுத்தும் என இஸ்ரேல் அரசு தெரிவித்து இருக்கிறது.

பெகாசஸ் பூதாகரத்துக்கு பின் முதல் பயணம்
இஸ்ரேலிய நிறுவனமான என்.எஸ்.ஓ. தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை இந்திய அரசு வாங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், செயல்பாட்டாளர்களின் செல்போனை ஹேக் செய்து உளவு பார்த்ததாக ஆதாரங்களுடன் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த பிரச்சனை பூதாகரமான பிறகு இஸ்ரேலிய பிரதமரின் இந்த அரசு முறை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்












Click it and Unblock the Notifications