காஸாவின் ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்- பாலஸ்தீன அகதிகள் 15 பேர் பலி!!
காஸா: பாலஸ்தீனத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அகதிகள் 15 பேர் பலியாகி உள்ளனர்.
காஸா பகுதிகள் மீது இஸ்ரேல் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல் நடத்தி வரும் இந்த இனப்படுகொலையில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,500ஐ தொட்டது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டுகிறது. சுமார் 2 லட்சம் பாலஸ்தீனர்கள் தங்களது சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர்.
அப்படி வெளியேறிய பாலஸ்தீனர்கள், வடக்கு காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்தனர். நேற்று இரவு முழுவதும் விடிய விடிய இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலில் ஐ.நா. பள்ளியும் தப்பவில்லை.
அங்கு அகதிகளாக தஞ்சமடைந்திருந்த பாலஸ்தீனர்களில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 50 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications