ஜப்பானில் உடைந்த கில்லிங் ஸ்டோன்.. 1000 ஆண்டுக்கு முன் இறந்த அழகான தீயசக்திக்கு மீண்டும் உயிர்ப்பு?
டோக்கியோ: ஜப்பானில் கடந்த 1000 ஆண்டுகளுக்கு மேலாக பேய் போன்ற தீயசக்திகளை அடக்கி வைத்திருந்ததாக நம்பப்படும் ஷீஷோ சேகி எனும் கில்லிங் ஸ்டோன் இரண்டாக பிளந்ததாக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுனு விளையாட போகும் போது சொல்லி வச்சாங்க.. எனும் பட்டுக்கோட்டையார் பாடலுக்கேற்ப ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை, மூடநம்பிக்கை, பழக்கவழக்கங்கள் உள்ளன.
அவற்றை இன்றளவும் மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். அவ்வாறு சில பழக்கவழக்கங்களை நாம் கேள்விப்பட்டால் பெரும்பாலும் மூடநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.

பேய் இருக்கா?
பேய், பிசாசு, பூதம், காட்டேரி, இவையெல்லாம் இருக்கிறதா இல்லையா, நம்பலாமா நம்பக் கூடாதா என்ற கேள்விக்கு இன்று வரை கான்கிரீட்டான பதில் கிடைக்கவில்லை. நம்புவோருக்கு இருக்கு, நம்பாதவர்களுக்கு இல்லை என்ற அளவுக்கே பதில்கள் உள்ளன. போதாக்குறைக்கு பேய் தொடர்பாக லாஜிக்கே இல்லாமல் நிறைய படங்களும் வெளிவருகின்றன.

கில்லிங் ஸ்டோன்
அவையும் இந்த பேய் குறித்த சந்தேகங்களுக்கு எரியூட்டி வருகின்றன. இந்த நிலையில் ஜப்பானில் இருந்து ஒரு பேய் கதை புறப்பட்டு இணையதளம் முழுவதும் பரவியுள்ளது. ஜப்பானில் ஷீஷோ சேகி எனும் கில்லிங் ஸ்டோன், கொலைக் கல் பாதியாக பிளந்து அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

புராணம் என்ன?
அந்த நாட்டு புராணங்களின்படி , இந்த ஷீஷோ சேகி 1107-1123 வரை ஆட்சி செய்த பேரரசர் டோபாவை கொல்லும் சதியின் ஒரு பகுதியாக செயல்பட்ட தமாமோ நோ மே என்ற அழகான பெண்ணின் சடலத்தின் பாகம் அந்த கல்லில் கலந்திருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பெண் ஒரு தீய சக்தி எனும் நம்பப்படுகிறது.

9 வால்களை கொண்ட நரி
9 வால்களை கொண்ட நரியான அந்த பெண்ணின் ஆவியை இந்த கல்லில் போட்டு கட்டி வைத்ததாக நம்பிக்கைகள் உள்ளன. டோக்கியோவிற்கு அருகில் உள்ள டோச்சிகி மாகாணத்தில் உள்ள சூடான நீரூற்றுக்குள் கொல்லும் கல் இருப்பதாக கூறப்படுகிறது. புத்த துறவி ஒருவர் அந்த கல்லை சிதறடித்து பேயை ஓட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இன்று வரை ஜப்பான் மக்கள் அந்த ஆவி, அந்த கல்லில் இருப்பதாக நம்புகிறார்கள்.

1000 ஆண்டுகளுக்கு பிறகு உயிர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள கொலை கல் இரண்டாக பிளந்து துண்டாகி உடைந்த புகைப்படம் வைரலானது. நாட்டுப்புற கதைகளின்படி இந்த பிளவுப்பட்ட கல் தொடர்ந்து விஷவாயுவை வெளியேற்றும் என கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தமாமோவின் ஆவி 1000 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயிர்த்தெழுந்துவிட்டதாக மக்கள் நம்புகிறார்கள்.

இரண்டாக பிளந்தது ஏன்?
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே பாறையில் விரிசல் ஏற்பட்டு அதன் மூலம் மழைநீர் சென்று அதனால் ஏற்பட்ட பாதிப்பே கல் உடைவதற்கு காரணம் என்கிறார்கள் உள்ளூர் விஞ்ஞானிகள். அந்த கல்லை தொட்டாலே அவரது மரணம் உறுதி என நம்பப்பட்டு வந்தது. ஜப்பான் அரசு இந்த கொலை கல் குறித்து விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications