வங்கதேசத்தில் ஆட்டமா போடுறீங்க? முகமது யூனுசுக்கு கெடு விதித்த கலிதா ஜியா கட்சி.. என்னாச்சு?
டாக்கா: நம்முடன் மோதலை கடைப்பிடித்து வரும் வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் அவருக்கு ஆதரவு அளித்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி இப்போது முகமது யூனுசுக்கு பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அவர் அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக இருப்பவர் முகமது யூனுஸ்.

இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. ஷேக் ஹசீனா நம் நாட்டுடன் நட்பாக இருந்தார். ஆனால் முகமது யூனுஸ் அப்படியில்லை. நம் நாட்டின் எல்லையில் நம்முடன் மோதி வருகிறார். அதேபோல் நம் நாட்டுக்கு பதிலாக எதிரியாக உள்ள பாகிஸ்தான், துருக்கி, சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறார்.
இதனால் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்குமான உறவு என்பது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள இடைக்கால அரசும், அதன் தலைமை ஆலோசகரான முகமது யூனுசும் தான் காரணம். இந்த இடைக்கால அரசால் வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அதுமட்டுமின்றி அங்குள்ள இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மீதான தாக்குதல், கோவில்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இப்படி ஆட்டம் போட்டு வரும் முகமது யூனுஸ்க்கு தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு செயல்பட்டு வரும் பிஎன்பி எனும் வங்கதேச தேசியவாத கட்சி தான். இந்த கட்சியின் தலைவர் யார் என்றால் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா. தற்போது உடல்நலக்குறைவு காரணமாக கலிதா ஜியா வெளிநாட்டில் சிகிச்சையில் உள்ளார். வங்கதேசத்தில் இவரது கட்சிக்கும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கிற்கும் தான் நேரடி போட்டி உள்ளது.
ஷேக் ஹசீனா தற்போது நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள நிலையில் கலிதா ஜியா ஹேப்பினார். அதோடு இடைக்கால அரசு மற்றும் முகமது யூனுஸை ஆதரித்தார். தற்போது அவரது கட்சி நிலைப்பாட்டை மாற்றி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் தான். அதாவது ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இனி தேர்தல் நடந்தால் நாம் வெற்றி பெறலாம் என்று கலிதா ஜியா நினைத்தார். இதனால் அவர் இடைக்கால அரசை ஆதரித்தார். அதோடு சில மாதங்களிலேயே தேர்தல் வந்துவிடும். அதில் வென்று பிரதமர் பதவியை பிடிக்கலாம் என்று கலிதா ஜியா நினைத்தார்.
ஆனால் முகமது யூனுஸ் ட்விஸ்ட் வைத்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்த நிலையில் இப்போது ஜனவரி மாதம் வந்துவிட்டது. 5 மாதங்கள் ஆனாலும் கூட இப்போது வரை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் முகமது யூனுஸ் மற்றும் இடைக்கால அரசு மீது அவரது கட்சி கோபமடைந்துள்ளது. வங்கதேச தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று பிரஷர் போட தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சியின் நிலைக்குழு மீட்டிங் சமீபத்தில் நடந்தது. அந்த மீட்டிங் என்பது பொறுப்பு தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையில் நடந்தது. அதில் வங்கதேசத்தில் தேர்தலை விரைவில் நடத்த இடைக்கால அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்போது நாட்டில் ஷேக் ஹசீனாவு மற்றும் அவரது கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி வெல்ல வேண்டும். காலம் கடத்தினால் தேர்தல் வெற்றி கைவிட்டு சென்றுவிடும். இதனால் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்த இடைக்கால அரசுக்கு பிரஷர் கொடுக்க வேண்டும் என்று தலைவர்கள் கூறியுளளனர்.
இதுதொடர்பாக கட்சியின் பொது செயலாளர் மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கிர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ‛‛தேர்தல் நடத்த காலதாமதம் ஏன் ஆகிறது? என்பதற்கு சரியான காரணம் இல்லை. தேர்தலை இந்த ஆண்டு ஜுலை முதல் ஆகஸ்ட் மாத கால இடைவெளியில் நடத்த வேண்டும். நாட்டின் நலன்கருதி இடைக்கால அரசும், தேர்தல் ஆணையமும் இந்த முடிவை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்து அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளார்.
இது முகமது யூனுஸ் மற்றும் இடைக்கால அரசுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. வரும் நாட்களில் பிஎன்பி கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்பதால் இது முகமது யூனுசுக்கு பெரும் சிக்கலாக மாறலாம் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த மாதம் வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் பற்றி முகமது யூனுஸ் தெரிவித்து இருந்தார். அப்போது அவர், ‛‛வங்கதேசத்தில் வாக்குரிமை வயது 18 ஆக உள்ளது. இதனை 17 ஆக குறைக்க வேண்டும். இந்த 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும்'' என்று கூறியிருந்தார்.
இதன் பின்னணி என்னவென்றால் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது வங்கதேசத்தில் வந்துவிடும். இதனை முகமது யூனுஸ் மற்றும் அவரது தலைமையிலான ஆலோசகர்களாக இருப்பவர்கள் விரும்பவில்லை. மாறாக தேர்தலை தள்ளி போட்டு இன்னும் ஓராண்டு காலம் இடைக்கால அரசில் பொறுப்பில் இருக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் கலிதா ஜியாவின் கட்சி அதனை உணர்ந்து கொண்டுள்ளதோடு, நாடாளுமன்ற தேர்தலை ஆகஸ்ட் மாதத்துக்கள் நடத்த வேண்டும் என்று பிரஷர் போட தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications