”மண்டை ஓடு” வான்வழி தாக்குதல்.. படத்தை பகிர்ந்த ஈரானின் கமேனி! அமெரிக்காவுக்கு கொடுத்த வார்னிங்கா?
தெஹ்ரான்: ஈரானில் உள்ள மூன்று அணு மையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், முதல் முறையாக ஈரான் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனி தனது ரியாக்ஷனை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் மண்டை ஓடு, மற்றும் வான் வழி தாக்குதல் நடத்துவது போல படங்கள் இடம் பெற்ற புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே மோதல் ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இஸ்ரேலுக்கு சரமாரியாக பதிலடியை ஈரான் கொடுத்து வருகிறது.

தண்டனை தொடரும்
இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக நடந்து வரும் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா, ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது. ஆனால், திடீரென தெஹ்ரானில் மூன்று முக்கிய அணு உலைகளை குண்டு வீசி அமெரிக்கா தாக்கியது. இதனையடுத்து, ஈரான் நாட்டின் அதி உயரிய தலைவர் அயதுல்லா அலி காமெனி தனது முதல் எதிர்வினையாக, "இஸ்ரேலை" குறிக்கும் "சியோனிச எதிரிக்கு" தண்டனை தொடரும்" என்று கூறியிருந்தார்.
பெரும் தவறு இழைத்துவிட்டார்கள்
அமெரிக்காவும் கோதாவில் இறங்கியதால் பெரும் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு உடனடியாக எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் கமேனி இருந்தார். இந்த நிலையில், இன்று முதல் முறையாக தனது மவுனத்தை கலைத்துள்ளார். இது குறித்து கமேனி கூறியிருப்பதாவது: -
"சியோனிஸ் எதிரிகள் தவறு இழைத்துவிட்டார்கள். அவர்கள் மிகப்பெரும் குற்றம் செய்து இருக்கிறார்கள். இதற்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும். உடனடியாக தண்டனை வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். மேலும், வான் வழி தாக்குதல் போன்ற புகைப்படம் ஒன்றையும் கமேனி பகிர்ந்துள்ளார்.
மண்டை ஓடு படம்
அதில், ஒரு மண்டை ஓடு படமும் இடம் பெற்றுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அயோதுல்லா அலி கமேனியின் இந்த பதிவு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, டெஹ்ரானின் மூன்று அணு மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது குண்டு வீசி இஸ்ரேலின் மோதலில் இணைந்தது. ஈரானின் அணு உலைகளில் ஒன்றான ஃபோர்டோ, ஈரானின் மிகவும் ரகசியமான மற்றும் பலத்த பாதுகாப்பு கொண்ட அணு உலை ஆகும். இந்த அணு உலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசியது.
அமெரிக்காவின் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி 30,000 பவுண்டு பதுங்கு குழி தகர்க்கும் வெடிகுண்டுகள், 30 டோமஹாக் ஏவுகணைகள், எஃப்-22 ராப்டர்கள் மற்றும் எஃப்-35ஏ லைட்னிங் போர் விமானங்களைக் கொண்டு நடத்தப்பட்டன. தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் கூறுகையில், ஈரான் இறங்கி வர வேண்டும் என்றும் இல்லையென்றால் எதிர்காலத் தாக்குதல்கள் மிகவும் பெரியதாக இருக்கும். பேச்சுவார்த்தைக்கு விரைவில் வரவில்லை என்றால், பிற இலக்குகளை துல்லியமாகவும், வேகமாகவும், திறமையாகவும் தாக்குவோம் என்று கூறியிருந்தார்.
ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பின்னர் ஈரானியத் தலைவர்களின் பதிலடி மற்றும் பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல் ஆகியவை சர்வதேச அரங்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால், இப்பிரச்சினை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இதற்கிடையே, ஈரானுக்கு ஆதரவாக நிற்போம் என்று ரஷ்யாவும் கூறியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
-
முக்கிய கட்டத்தை எட்டிய பேச்சுவார்த்தை.. பாகிஸ்தானிலிருந்து வந்த குட் நியூஸ்! இந்தியாவுக்கு நிம்மதி! -
ஈரான் விவகாரத்தில் உள்ளே வரும் ரஷ்யா? பெசஸ்கியானுக்கு போனை போட்ட புதின்! பேசியது என்ன? -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
இஸ்லாமாபாத்தில் இனிப்பு பேச்சு.. ஹார்முஸ் ஜலசந்தியில் சத்தமே இல்லாமல் சம்பவம்.. ட்ரம்ப் அதிரடி -
5 மணி நேரம் ரூம் ரூமாக ஓடிய அதிகாரிகள்.. அமெரிக்க தலைவர்களின் ரூமிற்கே வர மறுத்த ஈரான்! பரபர தகவல் -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
மூடு மாறிய டிரம்ப்! 'ரீசெட்' பண்ணிடுவோம் பாத்துக்கோங்க.. ஈரான் விஷயத்தில் வாயை விட்டுட்டாரே! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. பேச்சுவார்த்தையில் தொடர் இழுபறி! நெதன்யாகு லேசுபட்ட ஆள் கிடையாது! -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான்












Click it and Unblock the Notifications