Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவைத்தில் 'கிஃப்' நடந்திய மாபெரும் பொதுக்கூட்டம்

Subscribe to Oneindia Tamil

குவைத்: குவைத்தில் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமை அன்று தஸ்மா டீச்சர்ஸ் சொசைட்டி அரங்கில் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

KIFF's meeting a grand success in Kuwait

மாலை 6.30 மணிக்கு மௌலவி கலீல் பாகவி திருக்குர்ஆன் ஓதி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தார். ஃபோரத்தின் தமிழ் பிரிவு தலைவர் கிபாயதுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார்.

KIFF's meeting a grand success in Kuwait

அதை தொடர்ந்து பொதுக் கூட்டத்தை தலைமை பொறுப்பேற்று நடத்திய ஃபோரத்தின் மண்டல தலைவர் சைஃபுத்தீன் மௌலவி தலைமை உரை நிகழ்த்தினார். மேலும் அம்ஜத் அலி ஃபோரத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார். தொடர்ந்து எஸ்டிபிஐ தமிழ் மாநில தலைவருக்கு நினைவு பரிசை ஃபோரத்தின் மண்டல தலைவர் வழங்கி கௌரவித்தார். சமீபத்தில் தான் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற டிவிஎஸ் ஹைதர்அலி அவர்களுக்கும் ஃபோரத்தின் மண்டல தலைவர் நினைவு பரிசை வழங்கி கௌரவித்தார்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "ஆட்சி மாற்றங்களும் இந்திய மக்களின் எதிர்காலமும்"என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் (எஸ்டிபிஐ) தமிழ் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் தனது உரையில் வளர்ச்சியை வைத்து ஆட்சியை பிடித்த பாஜக தன்னுடைய இந்துத்துவ அஜெண்டாக்களை அமல்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுகின்றதை சுட்டிக் காட்டினார். மேலும் மக்கள் ஒரு புறம் வளர்ச்சி மாயையை நம்பி வாக்களித்துவிட்டு அதற்கான பலனை அனுபவிப்பதை எடுத்துரைத்தார். குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்காக இந்த அரசு எவ்வாறு முடுக்கிவிடப்பட்டிருக்கிறது என்பதையும் கூறினார்.

KIFF's meeting a grand success in Kuwait

இந்திய முஸ்லிம்களின் அரசியல் அவல நிலை பற்றி எடுத்துரைத்த அவர், இந்திய முஸ்லிம்கள் அரசியலில் வலிமை பெறுவதின் அவசியத்தையும், நமது இந்திய தேசத்திற்கு பாசிச இந்துத்துவவாதிகளால் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை எதிர்கொண்டு, தலித்களையும், சிறுபான்மையினரையும் ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதுகாப்பது நமது கடமை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

KIFF's meeting a grand success in Kuwait

அதை தொடர்ந்து பொதுமக்களின் அனைத்து கேள்விகளுக்கும் தெஹ்லான் பாகவி அவர்கள் விளக்கம் அளித்தார். சகோதர அமைப்புகள் எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவருக்கு நினைவு பரிசுகளும், சால்வைகளும் அணிவித்து கௌரவித்தன. இறுதியாக உஸ்மான் அலியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. சிக்கந்தர் பாட்ஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+