கண், காது, இமை எதுவும் அவரை போல இல்லை.. பாடி டபுளை அனுப்பினாரா கிம் ஜோங் உன்.. வெடித்த சர்ச்சை!
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தன்னுடைய பாடி டபுள் எனப்படும் உடல் இரட்டையரை வெளியே அனுப்பி இருக்கிறார், அவர் இன்னும் வெளியே வரவில்லை என்ற புதிய சர்ச்சை இணையத்தில் வெடித்துள்ளது.
பியாங்யாங்: வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தன்னுடைய பாடி டபுள் எனப்படும் உடல் இரட்டையரை வெளியே அனுப்பி இருக்கிறார், அவர் இன்னும் வெளியே வரவில்லை, அவர் எங்கோ தலைமறைவாக இருக்கிறார் என்ற புதிய சர்ச்சை இணையத்தில் வெடித்துள்ளது.
Recommended Video
திடீர் என்று காணாமல் போய் இருந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் 21 நாட்களுக்கு பின் கடந்த வாரம் மீண்டும் மக்கள் முன்னிலையில் தோன்றினார். அவரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிய நிலையில் அவர் மக்கள் முன்னிலையில் தோன்றினார்.
அவர் இறந்துவிட்டதாக, மூளை சாவு அடைந்துவிட்டதாக செய்திகள் பரவிய வண்ணமிருந்தது. இந்த நிலையில் வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்து இருக்கிறார்.

உண்மை என்ன?
இந்த நிலையில் இப்போதும் கிம் ஜோங் உன் அந்த 21 நாட்கள் எங்கே போனார் என்ற விவரம் வெளியாகவில்லை. அவருக்கு உண்மையில் இதயத்தில் ஆபரேஷன் நடந்ததா அல்லது வேறு எங்காவது சென்று இருந்தாரா என்று விவரம் வெளியாகவில்லை. வடகொரியா ஊடகங்கள் இதை பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. அந்நாட்டு அரசும் இது அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

பெரிய சந்தேகம்
இந்த நிலையில் கிம் ஜோங் உன்னின் புதிய புகைப்படங்கள் பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கிம் ஜோங் உன்னின் புதிய புகைப்படத்தில், வீடியோவில் அவர் வேறு மாதிரி இருக்கிறார். அவரின் பற்கள் உடைந்துள்ளது. அவரின் இமை வேறு மாதிரி இருக்கிறது. கண்கள் கூட வேறு மாதிரி உள்ளது. அதோடு கன்னம் கூட வேறு மாதிரி இருக்கிறது. இது உண்மையில் கிம் ஜோங் உன் இல்லை என்கிறார்கள்.

தென்கொரியா நபர்கள்
தென் கொரியாவை சேர்ந்த சிலரும் அமெரிக்காவை சேர்ந்த சிலரும் இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். கிம் ஜோங் உன் தனக்கு என்று பாடி டபுள் எனப்படும் உடல் இரட்டையரை வைத்து இருந்தார். தன்னை பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது தன்னை போலவே இருக்கும் உடல் இரட்டையரை அவர் வெளியே அனுப்புவார். அந்த நபர்தான் இவர்.

வெளியே அனுப்பி மாட்டிக்கொண்டார்
இப்போதும் அதேபோல் அவர் உடல் இரட்டையரை வெளியே அனுப்பி மாட்டிக்கொண்டார் என்று அவர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர். ஆனால் இந்த சர்ச்சையை வடகொரியா ஊடகங்கள் மறுக்கவும் இல்லை ஏற்கவும் இல்லை. அதேபோல் கிம் ஜோங் உன்னின் தோற்றத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் குறித்தும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் கிம் ஜோங் உன் குறித்து இப்போதும் சந்தேகம் நிலவி வருகிறது.

பாடி டபுள் யார்
இதற்கு முன் இதேபோல் பெரிய தலைவர்கள் பாடி டபுள் வைத்து இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஹிட்லர் தனக்கு என்று பாடி டபுள் வைத்து இருந்தார். சாதம் உசைன், ஒசாமா பின்லேடன் ஆகியோர் கூட பாடி டபுள் வைத்து இருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. பெரிய நபர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் போது இதேபோல் பாடி டபுள் வைத்து இருப்பது வழக்கம் ஆகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications