எபோலாவை எதிர்த்து போராடாமல் வெளிநாட்டுக்கு ஓட்டம்?: 10 லைபீரிய மூத்த அதிகாரிகள் டிஸ்மிஸ்
மான்ரோவியா: எபோலா நோய்க்கு பயந்து வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்து நாடு திரும்பாத 8 அமைச்சர்கள் மற்றும் 2 கமிஷனர்களை லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் அதிரடியாக பதவிநீக்கம் செய்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் எபோலா வைரஸ் பரவி வருகிறது. இதில் லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது.
எபோலா வைரஸால் லைபீரிய மக்கள் பயத்தில் வசித்து வருகிறார்கள்.

பலி
எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதில் 1,100 பேர் லைபீரியாவைச் சேர்ந்தவர்கள்.

ஓட்டம்
லைபீரியாவை எபோலா அச்சுறுத்தும் வேளையில் அந்நாட்டைச் சேர்ந்த 6 உதவி அமைச்சர்கள், 2 துணை அமைச்சர்கள் மற்றும் 2 கமிஷனர்கள் வெளிநாட்டுக்கு சென்று அங்கேயே தங்கிவிட்டனர். அவர்கள் நோய்க்கு பயந்து தான் வெளிநாட்டுக்கு ஓடியதாக கூறப்படுகிறது.

திரும்பி வாருங்கள்
வெளிநாட்டுக்கு சென்ற அமைச்சர்கள் மற்றும் கமிஷனர்களை உடனே நாடு திரும்புமாறு கடந்த ஆகஸ்ட் மாதமே அவர்களுக்கு உத்தரவிட்டப்பட்டும் அவர்கள் வரவில்லை.

நெருக்கடி
நாடே நெருக்கடியில் இருக்க எந்த ஒரு காரணமும் இல்லாமல் வெளிநாட்டில் தங்கிய அமைச்சர்கள் மற்றும் கமிஷனர்களை லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் அதிரடியாக பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஒபாமா
எபோலாவை எதிர்த்து போராட உதவி செய்யுமாறு எல்லசன் ஜான்சன் சர்லீப் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் கேட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications