லிட்டில் இந்தியா கலவரம்: இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 52 இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 8-ஆம் தேதி நிகழ்ந்த பேருந்து விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்திவேலு என்பவர் உயிரிழந்தார். இதன் எதிரொலியாக லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் மூண்டது.
அப்போது கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையின் கட்டளைக்கு பணிய மறுத்ததோடு, அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக இந்தியர்கள் 52 பேரையும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் நாடு கடத்தும் செயலில் சிங்கப்பூர் அரசு இறங்கியுள்ளது.
சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, படிப்படியாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்கு யாரேனும் குந்தகம் விளைவிப்பது தெரியவந்தால், அவர்களை சிங்கப்பூரில் வெளியேறச் சொல்லும் உரிமை அரசுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications