காதலுக்கு வயதில்லை...: 103 வயது தாத்தாவை மணந்த 99 வயது பாட்டி.. 80 வருடக் காதல் கதை
அசுங்லான்: கிட்டத்தட்ட 80 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து 35 கொள்ளுப் பேரன் பேத்திகளை எடுத்து விட்ட தாத்தா, பாட்டி சமீபத்தில் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சாமி படத்தில் ஒரு பாடல் வருமே, ‘புள்ளக்குட்டி பெத்துக்கிட்டுக் கட்டிக்கலாமா...?' என்று அதனை தங்கள் வாழ்வில் நிரூபித்துக் காட்டியுள்ளனர் இந்த வயதான பராகுவே காதலர்கள்.
கல்யாணம் ஆகாமலேயே இத்தம்பதி கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காதல் கதை...
பராகுவே நாட்டை சேர்ந்த ஜோஸ்மனுவேர் (வயது 103). இவரது காதலி மார்ட்டினா லோபஸ் (99). 1933ம் ஆணு இவர்களுக்குள் காதல் பூ பூத்ததாம்.

35 கொள்ளு பேரப்பிள்ளைகள்....
ஆனால், திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் 80 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 8 குழந்தைகள், 50 பேரன் பேத்திகள், 35 கொள்ளுபேரன், பேத்திகள் உள்ளனர்.

கல்யாண ஆசை...
சமீபத்தில் இவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து கொள்ளும் ஆசை வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

திருமண விழா...
திருமண விழாவில், அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் உறவினர்கள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

உற்சாக மனநிலை....
மணமகளான பாட்டி அழகிய கல்யாண உடை அணிந்திருக்க, தாத்தாவாகிவிட்ட மணமகன் வீல் சேரில் அமர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து மணமகள் மார்ட்டினா லோபஸ் கூறும்போது, ‘இவ்வளவு காலம் நாங்கள் சேர்ந்து வாழ்ந்தாலும், இப்போது திருமணம் செய்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான் மிகவும் உற்சாகமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறேன்' என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications