விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி நீதிமன்றம்
ரோம்: விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமல்ல... அது விடுதலைப் போராட்ட இயக்கமே என்று இத்தாலி நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் தேசிய செயல் வீரர்கள் இத்தாலியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்து வழங்கினர்.
இது சர்வதேச பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரானது என தமிழ் தேசிய செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றமற்றவர்கள்
அவர்கள் மீது கடந்த 2010 - ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என கடந்த 2011 - ம் ஆண்டில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருளாதாரம், சீரான ராணுவ கட்டமைப்பு ஆகியவை உள்ளடக்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விடுதலை அமைப்பே
எனவே இந்த இயக்கம் ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியது. எனவே, இந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. அந்த வகையில் இத்தாலி தமிழ் தேசிய செயல் வீரர்கள் மீது சாட்டப்பட்ட குற்றம் அர்த்தமற்றது. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம் போர்க் குற்றம் புரிந்திருப்பின் அவற்றிற்கான விசாரணையை சர்வதேச மனித உரிமை மீறல்களுக்கான நீதிமன்றமே விசாரிக்க தகுதியானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இத்தாலி மேல் நீதிமன்றம்
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து இத்தாலி அரசு மேல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதற்கான வழக்கு கடந்த 27-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
9 நீதிபதிகள் முன்னிலையில் அந்த விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

பயங்கரவாத அமைப்பல்ல
அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஜெனீவா சாசனங்களுக்குட்பட்ட ஒரு விடுதலை இயக்கமாகவே பார்க்கப்பட வேண்டும்.
இதை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. எனவே, கீழ் கோர்ட்டு தீர்ப்பை தாமும் உறுதிப்படுத்துவதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளித்தனர்.

கருத்துக் கணிப்பு
இதற்கிடையே, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் சூடானில் மேற்கொள்ளப்பட்டது போன்று இலங்கையில் வடக்கு, மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் எவ்வாறான அரசை விரும்புகின்றனர் என்பது குறித்து கருத்து கணிப்புநடத்த வேண்டும்" என கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications