நேபாளத்தை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம் - 6.7 ரிக்டராக பதிவானது
காத்மாண்டு: நேபாளத்திலும், வடமாநிலங்களிலும் இன்று பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
வடமாநிலங்களையும், நேபாளத்தினையும் புரட்டிப் போட்டு பல்லாயிரம் பேரின் உயிரினைக் காவு வாங்கியது நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம். பல்வேறு கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக்கியதுடன் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்டர்ஷாக்குகள் ஏற்பட்டு வருகின்றன. மிதமான அளவில் அவை இருந்து வந்த நிலையில் இன்று சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது.
இந் நில அதிர்வானது நேபாளத்தில் ரிக்டரில் 6.7 அலகுகளாக பதிவானது. இந்நடுக்கமானது நேபாளத்திலிருந்து 17 கிலோமீட்டரில் கோதாரி என்ற இடத்தில் மையம் கொண்டதாக இருந்தது.
மேலும், வடமாநிலங்களான டெல்லி, கவுகாத்தி, பாட்னா, அலகாபாத், கொல்கத்தா, புவனேஷ்வர், பீகார், உத்தர பிரதேசத்திலும் கட்டிடங்கள் அதிர்ந்த காரணத்தினால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். டெல்லி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
பூட்டான் தலைநகர் திம்புவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அங்கும் பதட்டம் நிலவுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications