கடத்தப்பட்ட நைஜீரிய மாணவிகளை மீட்க நாம் போராட வேண்டும் – மலாலா அழைப்பு
கனோ: நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளுக்காக நாம் போராட வேண்டும் என்று பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி உயிர் பிழைத்து தற்போது லண்டனில் வசித்து வரும் மலாலா தெரிவித்துள்ளார்.
நைஜீரியா நாட்டில் உள்ள சிபோக் என்ற இடத்தில் விடுதியுடன் கூடிய பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்தனர்.
இங்கு புகுந்த அல் கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் இவர்களைக் கடத்திக் கொண்டு போய் விட்டனர்.

மாணவிகள் கடத்தல்:
இங்கு கடந்த மாதம் 14 ஆம் தேதி தீவிரவாதிகள் திடீரென நுழைந்து 200 க்கும் மேற்பட்ட மாணவிகளை கடத்தி சென்றனர். கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரும் 13 வயதில் இருந்து 17 வயதிற்கு உட்பட்டவர்கள்.

அடிமைகள் ஆக்குவோம்:
அவர்களை தீவிரவாதிகள் எங்கு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த மாணவிகளை தீவிரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளாக விற்கப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டியுள்ளனர்.

மீட்புக் குழு:
நைஜீரியா படையினர் அந்த மாணவிகளை மீட்பதற்கு இதுவரை எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. எனவே வெளிநாட்டு உதவிகளை நைஜீரியா நாடியுள்ளது. இதையடுத்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் வீரர்களையும், பிற மீட்புக் குழுக்களையும் நைஜீரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளன.

மலாலா வேண்டுகோள்:
இந்த நிலையில் பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் சுடப்பட்டு உயிர்பிழைத்த சிறுமி மலாலா நைஜீரியாவில் கடத்தப்பட்ட 200 மாணவிகளையும் தீவிரவாதிகள் விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் தஞ்சம்:
மலாலா பெண் கல்விக்காக குரல் கொடுத்து வந்தார். இதனால் அவரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். பலத்த காயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். தற்போது இங்கிலாந்து நாட்டில் அவர் தஞ்சமடைந்துள்ளார். அங்கிருந்தபடி இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

காப்பாற்ற குரல் கொடுப்போம்:
அவர் மேலும் கூறும்போது, கடத்தப்பட்ட மாணவிகள் அனைவரும் நமது சகோதரிகள். அவர்களுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இந்த பிரச்சினையை எங்கோ நடக்கும் பிரச்சினையாக கருதி கண்டுகொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. இதில் நாம் அமைதியாக இருந்தால் இதுபோன்ற மேலும் பல பிரச்சினைகள் நடக்க தொடங்கிவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications