பயத்தில் இருந்த பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசிய விமான சிப்பந்தி
பாரிஸ்: பெண் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சிப்பந்தி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநதர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. இதையடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 கடந்த மாதம் உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகினர்.

இதனால் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பாரிஸ் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 20-ல் பயணம் செய்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பயத்தில் இருந்துள்ளார். அதாவது மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று மாயமாகிவிட்டது, மற்றொன்று சுட்டுத் தள்ளப்பட்டுவிட்டது இதற்கும் ஏதாவது ஆகுமோ என்ற பயத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் விமான தலைமை சிப்பந்தி அந்த பெண்ணின் அருகில் அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூறுவது போன்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பயணி அளித்த புகாரின்போரில் பிரான்ஸ் போலீசார் அந்த சிப்பந்தியை கைது செய்தனர்.
ஏற்கனவே மலேசியன் ஏர்லைன்ஸின் பெயர் கெட்டுள்ள நிலையில் சிப்பந்தியின் செயல் அந்நிறுவனத்திற்கு மேலும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications