பினாங் பீச்சில் ‘ப்ரீ’யாக விளையாடிய 6 பேருக்கு ஒரு மாதம் சிறை - மேலும் 4 பேருக்கு வலை
கோலாலம்பூர்: மலேசியக் கடற்கரையில் நிர்வாண விளையாட்டு விளையாடிய 6 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அளிக்கப் பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் இடங்களில் ஒன்று மலேசியாவில் உள்ள பினாங் கடற்கரை. சமீபத்தில் அங்கு ஒரு கும்பல் நிர்வாணமாக விளையாடி மற்ற சுற்றுலாப் பயணிகளின் முகங்களை சுளிக்க வைத்தனர்.

தொடர் ஓட்டம், நடனம், உடலில் ஓவியம் தீட்டுவது என அவர்கள் நடத்திய கேளிக்கைகளுக்கு மற்ற சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பலதரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, இது தொடர்பாக ஒரு சிங்கப்பூரைச் சேர்ந்தவர் உட்பட ஆறு பேரை மலேசிய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்களுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ. 96 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்கு பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications