மலேசிய விமானம் மாயமான பிறகும் பல மணிநேரம் பறந்துள்ளது... விசாரணையாளர்கள் புதுத் தகவல்
கான்பெரா: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370, காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் இறுதி முடிவுக்கு வந்துள்ளனர்.
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக மலேசிய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல்வேறு நாடுகளின் உதவியுடன் கடந்த 2 மாதங்களாக விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால், மாயமான விமானம் குறித்து இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், விமானம் மாயமான பிறகும் தொடர்ந்து மிகவும் கட்டுப்பாடான முறையில், பல மணி நேரம் செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

சேதமடைந்திருக்க வாய்ப்பில்லை...
மேலும் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது எந்தவிதமான சேதமும் அடைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தெற்கு இந்தியப் பெருங்கடல் மீது பறந்தபோது எரிபொருள் தீர்ந்து விபத்தில் சிக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடும் பணி விரிவு...
இந்த தீர்மானமான விசாரணை முடிவைத் தொடர்ந்து தற்போது தென் மேற்கு இந்தியப் பெருங்கடலில் தேடுதல் பகுதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரேடார், செயற்கைக்கோள் தகவல்கள்...
மலேசிய ராணுவ ரேடார் தகவல்களை வைத்து தற்போதைய முடிவுக்கு விசாரணையாளர்கள் வந்துள்ளனர். மேலும், இன்மார்சாட் செயற்கைக் கோள் தகவல்களின் அடிப்படையிலும் இந்த முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

திட்டமிடாத பாதை...
முன்னதாக 239 பேருடன் பறந்த அந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தாய்லாந்து வளைகுடாவுக்கு மேலே பறந்தபோது அது ரேடாரின் பார்வையில் சிக்கியுள்ளது. இது திட்டமிடப்படாத பாதையாகும். அதன் பின்னர் அந்த விமானம் மலேசிய தீபகற்பத்தைக் கடந்து மலாக்கா ஜலசந்திப் பகுதியில் பறந்துள்ளது. அதன் பின்னர் ரேடார் பார்வையிலிருந்து மறைந்து இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மீது பறந்துள்ளது.

முரணான தகவல்...
இதன் அடிப்படையில் அந்த விமானம் மலாக்கா பகுதியில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இந்த கருத்து தவறு என்றும் இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்து பின்னர் விழுந்திருப்பதாக பின்னர் தகவல்கள் வெளியாகின. அங்கு தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டது.

விசாரணையாளர்கல் கருத்து...
இந்த நிலையில்தான் இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்தபோது பல மணி நேரத்திற்கு விமானம் தொடர்ந்து கட்டுப்பாடான முறையில் பறந்துள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய தேடுதல் பகுதி...
இதனால் தென் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் சில புதிய பகுதிகளுக்கு தேடுதல் வேட்டை மாற்றப்பட்டுள்ளது. புதிய பகுதியானது 400 மைல்கள் நீளமும், 60 மைல் அகலமும் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications