ரஜினி சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் டிவிட்டரில் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ரஜினியுடனான சந்திப்பை 'இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பீட்டாலிங்: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ரஜினியுடனான சந்திப்பை 'இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா இரண்டு நாட்கள் நடைபெறகிறது. நேற்று மலேசியா சென்றடைந்த நடிகர் ரஜினியை ரசிகர்கள் வரவேற்றனர்.
இன்று காலை நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இன்று மாலை நட்சத்திர கலைவிழா நடைபெறுகிறது.

மலேசியாவில் வரவேற்பு
இதற்காக நேற்றே நடிகர் நடிகைகள் மலேசியா சென்றுவிட்டனர். மலேசியா சென்ற அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசிய பிரதமருடன் சந்திப்பு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் விமானத்தில் மலேசியா சென்றார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்து பேசினார்.

மிகப்பெரிய சந்திப்பு
இந்நிலையில் ரஜினியுடனான சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியுள்ளார். அதாவது, மலேசியாவில் இன்று மீண்டும் ரஜினியுடன் மிகப்பெரிய சந்திப்பு என ரஜினியுடனான சந்திப்பை அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
|
தலைவா ரஜினிகாந்த்
மேலும் நடிகர் ரஜினிகாந்தை தலைவா என்றும் மலேசிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இங்கு உங்கள் நேரத்தை கொண்டாடுங்கள் என்றும் மலேசிய பிரதமர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

ரஜினி வீட்டில் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ள நிலையில் மலேசிய பிரதமருடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் வந்த நஜிப் ரசாக் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications