மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தை தரதரவென இழுத்துச் சென்ற போலீஸார்!
மாலே: மாலத்தீவு முன்னாள் அதிபர் முகம்மது நஷீத்தை கோர்ட் வளாகத்திற்குள் போலீஸார் தரையோடு தரையாக தரதரவென இழுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்தியாளர்களிடம் பேச முயன்றபோது அதைத் தடுத்த போலீஸார் வலுக்கட்டாயமாக இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். 2012ம் ஆண்டு அதிபராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி நீதிபதி அப்துல்லா முக்மதுவை கைது செய்ய ராணுவத்தைப் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் நஷீத் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் நஷீத்.

இந்த வழக்கில் நேற்று நஷீத்தை ஆஜர்படுத்த கோர்ட்டுக்குக் கொண்டு வந்தனர் போலீஸார். அப்போது அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பேச முயன்றார் நஷீத். ஆனால் அதைப் போலீஸார் தடுத்தனர். இதையடுத்து கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் நஷீத். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், அதிரடியாக நஷீத்தை தரதரவென தரையோடு தரையாக இழுத்துச் சென்றனர் போலீஸார்.

நீதிபதி முகம்மதுவை கைது செய்ய நஷீத் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். இதையடுத்து மாலத்தீவில் மக்கள் புரட்சி வெடித்தது. போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகினார் நஷீத்.
30 ஆண்டு காலம் மாலத்தீவை தனது பிடியில் வைத்திருந்த மாமூன் அப்துல் கயூமை தோற்கடித்த முதல் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக பதவிக்கு வந்தவர் நஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியிலிருந்து விலகிய பின்னர் 2013ல் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட நஷீத், கயூமின் ஒன்று விட்ட சகோதரரான யாமீனிடம் தோல்வியுற்றார்.
தற்போது நஷீத்துக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் தனது வக்கீல் யார் என்பதைச் சொல்ல வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications