மீண்டும் வேலையை காட்டும் சீனா.. மாலத்தீவை வைத்து இந்தியாவுக்கு போடும் ஸ்கெட்ச்!
பீஜிங்: சீனாவின் கடல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான, தென் சீனக் கடல் சார் நிறுவனத்துடன் மாலத்தீவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் தோரொயிக் இப்ராகிம் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனா தனது பிராந்திய எதிரிகளை தனது நட்பு நாடுகள் மூலம் உளவு பார்க்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முகம்மது முய்சு எடுத்து வருகிறது. இதனால், இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவானது. இதற்கிடையே, கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள் இன ரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தனர். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இதனால், இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவு முன்பு போல சுமூகமாக இல்லை. இந்தியப் பெருங்கடலில் அமைந்து இருக்கும் குட்டி தீவு நாடு என்றாலும் கூட மாலத்தீவு அமைந்து இருக்கும் இடமானது இந்தியாவின் பாதுகாப்புக்கும், புவிசார் அரசியலுக்கும் மிகவும் முக்கியமானது. இதனால், மாலத்தீவை வளைத்து போட்டு தங்கள் கைக்குள் வைத்துக்கொள்ள சீனா துடிக்கிறது.
மாலத்தீவுகளுக்கு கடனுதவி என்ற பெயரில் பெரிய அளவில் பணம் கொடுத்து அந்த நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிக்க சீனா முயற்சித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், தென் சீனக் கடல் சார் நிறுவனத்துடன் மாலத்தீவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. தென் சீனக் கடல் கடல்சார் நிறுவனம் என்பது சீனாவின் மிகப்பெரிய கடல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும் ஆராய்ச்சி கப்பல்களை வடிவமைத்து கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. எனவே, மாலத்தீவு அரசு முகமை மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் கவனம் பெற்று இருக்கிறது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மாலத்தீவு சுற்றுலாத்துறை அமைச்சர் தோரொயிக் இப்ராகிம் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் சீனா தனது பிராந்திய எதிரிகளை தனது நட்பு நாடுகள் மூலம் உளவு பார்க்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதேவேளையில் இந்தியாவுடனும் இதே போன்ற ஒரு ஒப்பந்தத்தை மாலத்தீவு போட்டு இருந்தது. எனினும் முகம்மது முய்சு அதிபரானதும் இந்த ஒப்பந்தத்தை அதாவது, 2023-ல் ரத்து செய்தார்.












Click it and Unblock the Notifications