குறைந்த விலையில் ஐபேட் ஏர் 2 ஆர்டர் செய்தவருக்கு ஆப்பு வைத்த ஆன்லைன் நிறுவனம்!
நியூயார்க்: ஆன்லைனில் குறைந்த விலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஏர் 2வினை ஆர்டர் செய்தவருக்கு வெறும் பேப்பரை அனுப்பி ஆன்லைன் நிறுவனம் ஒன்று மோசடியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபேட் ஏர் 2 ரூபாய் 35,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஆன்லைன் இணையதளம் ஒன்றில் சமீபத்தில் இதன் தள்ளுபடி விலை வெறும் ரூபாய் 6,600 அதாவது 100 அமெரிக்க டாலர்கள் மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை நல்ல வாய்ப்பாக கருதிய ஒருவர் உடனடியாக இந்தத் தள்ளுபடியிலேயே ஐபேட் ஏர் 2 வை வாங்கினார். வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டதும் அந்த ஐபேட் பார்சலை ஆசையாகப் பிரித்துப் பார்த்தவருக்கு அது வெறும் பேப்பர் என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார்.
ஐபேடின் முன்புறம் போன்ற பிளாஸ்டிக் அட்டைப் படத்துடன் கார்ட்போடை வைத்து, பின்புறத்தை டேப் அடித்து நிஜமான ஐபேடை போலவே, வைத்திருந்தனர் அந்த ஆன்லைன் நிறுவனத்தினர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் அப்போட்டோவை வெளியிட்டுள்ளார் ஏமாந்த அந்த நபர். மேலும், "ஹலோ இது ஒரு நல்ல பேப்பர், ஐ "பேட்" ஏர் 2" என்று தனது சோகக் கதையை ஜாலியாக வெளியிட்டுள்ளார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications