மேக்அப் கலைந்த மனைவியின் முகத்தைப் பார்த்து கணவன் அதிர்ச்சி... விவாகரத்து கோரிக்கை
துபாய்: ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்யலாம் என்பார்கள். ஆனால் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதை மறைக்க மேக்அப் போட்டு ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட துபாய் பெண்ணின் வாழ்க்கை இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ் திரைப்படம் ஒன்றில் தனது கறுப்பான தங்கைக்கு திருமணம் முடிக்க உடம்பு முழுவதும் பெயிண்ட் அடித்து இருப்பார் கவுண்டமணி. அதை உண்மை என்று நம்பிய செந்தில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வார். மறுநாள் அந்த பெண் குளிக்கும் போய் பெயிண்ட் சாயம் போன பின்னர் உண்மை உருவம் தெரியவரும். அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போவார் செந்தில். தான் ஏமாற்றப்பட்டதாக புலம்புவார். இது போல ஒரு சம்பவம் துபாயில் நடந்தேறியுள்ளது.

திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக மேக்கப் இல்லாமல், தன் மனைவியை பார்த்த கணவன் அதிர்ச்சியடைந்து விவாகரத்து கோரியுள்ளார். துபாயை சேர்ந்த 38வயது ஆணும் , 28வயது பெண்ணும் சிலநாட்களுக்கு முன்பு புதிதாக திருமணம் செய்து கொண்டனர். அந்தப் பெண் அதீத அழகுடன் இருக்கவே கணவனுக்கு பெருமை தாங்கவில்லை. சந்தோஷமாகவே எல்லாம் முடிந்தது. ஹனிமூன் கிளம்பினர். இருவரும் குளிப்பதற்காக நீச்சல்குளத்திற்கு சென்று நன்றாக குளித்தனர்.
அப்போது கணவன் மனைவியின் உண்மையான முகத்தை பார்த்து அடையாளம் தெரியாமல், அதிர்ச்சியில் உறைந்துவிட்டாராம். அளவுக்கதிமான மேக்கப் சாதனங்களை பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக விவாகரத்து செய்ய அவர் முடிவெடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மனமுடைந்த அந்தப் பெண், உளவியல் நிபுணர் டாக்டர் அப்துல் அஜிசிடம் உதவிக் கோரிஇருந்தார். ஆனால் உளவியல் நிபுணரின் ஆலோசனையை அந்த நபர் கேட்பதாகவே இல்லை. தனது முடிவில் உறுதியாகவே இருக்கிறார்.
அந்த பெண் திருமணத்திற்கு முன்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை மறைத்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார். மேக்கப் போட்டு உண்மையான முகத்தை மறைத்து வந்த பெண், தன் கணவரிடம் பலமுறை உண்மையை சொல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இனி அவர்கள் சேர்வது கடினம் "என்று கூறுகிறார் உளவியல் நிபுணர். அதீத மேக்அப் வாழ்க்கைக்கே உலை வைத்துவிட்டது என்பதுதான் சோகம். இந்த சம்பவத்தை கல்ஃப் நியூஸ் செய்தியாக வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் அவர்களின் பெயர்களையும் அவர்கள் யார் என்பது பற்றியும் அந்த உளவியல் நிபுணர் தகவல் தெரிவிக்கவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications