ஜூம் வீடியோ காலில் முதல் கொலை...அமெரிக்காவில் பயங்கரம்.. தந்தையை பழி தீர்த்த மகன்
நியூயார்க்: ஜூம் வீடியோ காலில் 20க்கும் மேற்பட்டவருடன் உரையாடி கொண்டிருந்த தந்தையை திடீரென அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் ஐலேண்ட்டில் டிக்சன் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ட்வைட் பவர்ஸ் வயது 72. இவர் வியாழக்கிழமை மதியம் (இந்திய நேரப்பபடி இன்று அதிகாலை) 20க்கும் மேற்பட்டோருடன் ஜூம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ட்வைட் பவர்ஸை அவரது 33 வயது மகன் கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். ஜும் வீடியோ காலில் இருந்த மற்ற நபர்கள் அதிர்ச்சியுடன் இந்த படுகொலை வேடிக்கை பார்த்தனர். அந்த வீடியோவில் உடலில் ஆடை இல்லாமல் இருந்த அவரது மகன் படுகொலை செய்தது தெரியவந்தத. அவரது கையில் பச்சை குத்தி இருந்தார். படுக்கையை குத்தி கிழித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ஜூம் வீடியோ காலில் இருந்தநபர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசாரும் மற்றவர்களும் சுமார் 15 நிமிடங்கள் குற்றம் நடந்த இடத்தை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சஃபோல்க் கவுண்டி போலீசார் சம்பவம் நடந்த டிக்சன் அவென்யூவில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அங்கு சுமார் ஒரு மைல் தொலைவில் இருந்த
படுகொலையை நிகழ்த்திய தாமஸ் ஸ்கல்லி-பவர்ஸை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர், சஃபோல்க் கவுண்டி போலீஸ் தலைமையகத்திற்கு அவரை கொண்டு சென்றனர். தாமஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை செய்துவிட்டு ஜன்னலுக்கு வெளியே குதித்தது தப்பிக்க முயன்றதால் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஏன் தந்தையை கொலை செய்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். ஜூம் வீடியோ காலில் தந்தையை மகன் குத்தி கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications