கொரோனா வைரஸ் அச்சம்.. மனைவியை பாத்ரூமில் வைத்து பூட்டிய உஷார் கணவர்
வில்னியஸ்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடான லித்துவானியாவில் பாத்ரூமில் வைத்து மனைவியை கணவர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகத்தையே கொரோனா வைரஸ் என்ற ஒரு உயிர்கொல்லி ஆட்டிப் படைத்து வருகிறது. 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டது.

அன்டார்டிகா தவிர மற்ற அனைத்து கண்டங்களுக்கும் இது பரவியுள்ளது. உலகம் முழுவதும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. லித்துவானியாவில் உள்ள வில்னியஸ் நகரத்தில் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் அந்த பெண்ணை பாத்ரூமில் வைத்து பூட்டியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்று பாத்ரூமில் இருந்த அந்த பெண்ணை விடுவித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் கணவரும் இரு மகன்களும் ஒரு பெண்ணை பாத்ரூமில் அடைத்து வைத்துக் கொண்டு வெளியே விட மறுப்பதாக புகார் கிடைத்தது.
அந்த புகாரின் பேரில் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டோம். வெளிநாட்டிலிருந்து வந்த நபருடன் தான் பேசியதால் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளுமா என கணவனிடம் அந்த பெண் கேட்டதற்கு அவரை பாத்ரூமில் அடைத்து வைத்ததாக கூறினார். இதையடுத்து எந்த புகாரும் அவர் அளிக்கவில்லை. பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைத்து அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்றனர்.
Recommended Video
அங்கு அவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என வந்துவிட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications