அமேசான் காட்டில் 31 நாட்கள் பூச்சி, புழுக்களை சாப்பிட்டு சிறுநீரை குடித்து உயிர் தப்பிய நபர்!
அமேசான் காட்டில் காணாமல் போன நபர் 31 நாட்களாக புழுக்களை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த கொடூரம் நடந்துள்ளது.
பிரேசிலியா: அமேசான் காட்டில் காணாமல் போன நபர் 31 நாட்களாக புழுக்களை சாப்பிட்டும் சிறுநீரை குடித்தும் உயிர் வாழ்ந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
பிரேசிலில் உள்ளது அமேசான் காடு. இது சுமார் 55 லட்சம் கிமீ பரப்பளவை கொண்டது. இங்கு பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த காட்டில் 390 பில்லியன் மரங்கள் காணப்படுகின்றன. அதிலும் அவை வெவ்வேறு விதமான மரங்கள்.
இந்த காடானது 9 நாடுகளுக்கு சொந்தமானது. இது தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ளது. பிரேசிலில் 58சதவீத எல்லையை இந்த காடு பகிர்கிறது. அது போல் பெரு, பொலிவியா, கொலம்பியா, வெனிசுலா, கியானா, சுரிநேம், பிரெஞ்ச் குயானா, ஈகுடார் ஆகிய நாடுகளுக்கும் இந்த அமேசான் காடுகள் சொந்தமாகும்.

55 மில்லியன்
இந்த காடு 55 மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படும். அண்மையில் கூட ஒரு பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு நிறைய மரங்கள் அழிந்தன. இங்கு மூலிகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த மூலிகைகள் மூலம் நோயை குணப்படுத்த மாத்திரைகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த காடுகளுக்கு நன்றாக வழித்தடம் தெரிந்தால் மட்டுமே செல்ல வேண்டும்.

காட்டை சுற்றி பார்க்க
இல்லாவிட்டால் யாராவது ஒரு கைடை அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இந்த காட்டை சுற்றி பார்க்க பொலிவியவை சேர்ந்த 30 வயது ஜொனாட்டன் அகோஸ்டா தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அவர் அங்கு வேட்டையாடவும் சென்றார். அப்பது அவர் வழித்தவறி தனது நண்பர்களிடமிருந்து பிரிந்துவிட்டார். எங்கெங்கோ சுற்றி சுற்றி பார்த்தும் அவரால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வழித்தடத்தையே கண்டறிய முடியவில்லை.

அகோஸ்டா
இதையடுத்து அகோஸ்டாவை அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் தேடிபார்த்தனர். அப்போதும் அவர் கிடைக்கவில்லை. சுமார் 30 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதால் அனைவரும் அகோஸ்டாவின் நிலையை கண்டு அச்சத்தில் இருந்தனர். காட்டில் எந்த பொருளுமே கிடைக்காதே சாப்பிடாமல் எப்படி அகோஸ்டா உயிர் வாழ்ந்திருக்க முடியும் என உறவினர்கள் அழ தொடங்கிவிட்டனர்.

உள்ளூர்வாசிகள்
பின்னர் அகோஸ்டாவை உள்ளூர்வாசிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. நிம்மதிபெருமூச்சுடன் மருத்துவமனைக்கு ஓடோடி வந்தனர். அப்போது என்ன நடந்தது என அகோஸ்டாவிடம் கேட்டனர். அதற்கு அவர் சொன்னதை கேட்டதும் உறவினர்கள் மேலும் கதறி அழுதனர். அகோஸ்டா வழித்தவறி சென்றவுடன் எந்தெந்த வழியிலோ சென்றாராம். ஆனாலும் அவரால் வெளியே வரமுடியவில்லை.

31 நாட்கள்
இதனால் என்ன செய்வது என தெரியாமல் யாராவது காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தாராம். 31 நாட்களுக்கு சாப்பிட வெறும் பூச்சி, புழுக்களை எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அங்கு மழை பெய்யும் போதெல்லாம் தனது ஷூக்களில் தண்ணீரை தேக்கி வைத்து பிடித்து குடித்துள்ளார். அந்த தண்ணீர் காலியாகிவிட்டால் தனது சிறுநீரை கூட பிடித்து குடித்தாராம்.

கொடூரம்
மேலும் கொடூரமான காட்டு விலங்குகளிடம் ஓடி மறைந்துள்ளார். பல நாட்களாக நடந்து கொண்டே இருந்ததால் அகோஸ்டா உள்ளூர் மக்களின் நடமாட்டத்தை பார்த்துள்ளார். உடனே தன்னை காப்பாற்றும்படி சப்தம் எழுப்பினார். இதையடுத்து அவர்கள் வந்து இவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பூச்சிகளை உணவாக உட்கொண்ட கொடூரம் நடந்தாலும் அவர் உயிருடன் வந்துவிட்டாரே என குடும்பத்தினர் மகிழ்ந்தனர்.

17 கிலோ எடை குறைப்பு
மேலும் அகோஸ்டா 31 நாட்களாக எதையும் சாப்பிடாமல் இருந்ததால் அவரது எடை 17 கிலோ குறைந்துவிட்டது. மேலும் அவரது உடலில் இருந்து நீர் சத்து குறைந்துள்ளது. இதனால் அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் அகோஸ்டா தண்ணீர் குடிக்க கடவுளிடம் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக் கொள்வாராம். வேட்டைக்கு சென்றதால் இத்தனை ஆபத்து இருந்ததை உணர்ந்த அகோஸ்டா இனி வேட்டையாடுதலை விட்டுவிடுவதாக உறுதி அளித்துள்ளார். இனிமேல் கடவுளுக்காக இசையை உருவாக்க போகிறாராம். இதே போல் டொமினிகாவின் கரீபியன் தீவை சேர்ந்த ஒருவர் கொலம்பியா நீரில் 24 நாட்கள் உயிருடன் இருந்தார். மேகியை தண்ணீரில் கலந்து குடித்து உயிர் வாழ்ந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications