ரூ.10 லட்சத்திற்கு ஏலம்போன ஒரு மாம்பழம்.. அப்படி என்ன ஸ்பெஷல்? யாழ்ப்பாணம் கோயிலில் சுவாரஸ்யம்!
யாழ்ப்பாணம்: இலங்கை முருகன் கோவியில் ஒன்றில் நடந்த மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழத்தை ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மாம்பழத்தின் அடிப்படை தொகையாக ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு ஏலம் தொடங்கப்பட்ட நிலையில், கண்களை மூடி திறப்பதற்கு ரூ.6 லட்சம் வரை உயர்ந்தது. இதன்பின் இறுதியாக ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணம் அருகே நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான திருவிழா ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இய்ஜம் 7ஆம் நாள் திருவிழாவான நேற்று கோவிலில் மாம்பழத் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதனைத் தொடர்ந்து உலகப் பிரசித்தி பெற்ற முருகன் விநாயகர் இடையிலான மாம்பழப் போட்டி நடைபெற்றது.

அதில் உலகை முதலில் சுற்றி வந்து மாம்பழத்தைப் பெறுவது யார் என்ற சரிந்திர போட்டியை பிரதிபலிக்கும் நாடகம் நடத்தப்பட்டது. இதன்பின் முருகன் மயில் ஏறி உலகைச் சுற்றி செல்ல விழ்நாயரோ, சிவனையும், பார்வதியையும் வலம் வந்து மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த சடங்குகள் முடிவடைந்த பின் மாம்பழத்தை கோயில் நிர்வாகிகள் ஏலம் விட்டனர்.
அப்போது மாம்பழத்தின் அடிப்படை தொகையாக ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் தொகை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், ஏலத்தின் தொலை ரூ.6 லட்சத்திற்கு சென்று நின்றது. அதன்பின் சில நிமிடங்களில் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் கேட்கப்பட்டது. இறுதியாக ரூ.10 லட்சத்திற்கு மேல் ஏலம் கேட்க யாரும் முன் வரவில்லை. இதனால் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் கேட்ட நபருக்கு மாம்பழம் அளிக்கப்பட்டது.
இதனால் ஒரு மாம்பழம் ரூ.10 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அண்மையில் இலங்கை யாழ்ப்பாணம் ஸ்ரீசிவசுப்பிரமணியர் கோயிலில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழத்தை ரூ.4.60 லட்சத்திற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பக்தர் ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications