பலர் இறப்பார்கள்.. உயிர் தப்பிப்பவர்களுக்கும் ஆபத்துதான்.. அணு ஆயுத போர்.. பிரபல பிஷப் சொன்ன கணிப்பு
சிட்னி: மூன்றாம் உலகப் போர்.. அணு ஆயுத போராக மாறும்.. இது பேரழிவை ஏற்படுத்தும் என சிட்னியில் உள்ள பிரபல பிஷப் மார் மாரி இம்மானுவேல் கணிப்பை வெளியிட்டு உள்ளார். நவீன யுகத்தில் இவரின் கணிப்புகள் பல உண்மையாக மாறுவதாக அவரின் பின்தொடர்பாளர்கள் இடையே நம்பிக்கை உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில்தான் மூன்றாம் உலகப்போர் அணு ஆயுத போராக மாறும். இதனால் பல உயிர்கள் பறிபோகும், பிழைப்பவர்கள்.. ஏன் பிழைத்தோம் என்று வருந்துவார்கள்.. மனிதகுலத்திற்கு ஒரு இருண்ட எதிர்காலத்தை இது உருவாக்கும். மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தும் என்று பிஷப் மார் மாரி இம்மானுவேல் கணிப்பை வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே நாஸ்டர்டாமஸ் இது தொடர்பாக எச்சரித்து இருந்தார். உலகம் முழுக்க எதிர்காலத்தை கணித்து வல்லுனர்களின், தீர்க்கதரிசிகளில் மிக முக்கியமான நபராக கருதப்படுபவர் நாஸ்டர்டாமஸ். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இவர் எதிர்காலத்தில் உலகம் முழுக்க என்ன நடக்கும் என்பதை தனது புத்தகமான Les Propheties என்பதில் கவிதைகளாக எழுதி வைத்துவிட்டு சென்றார்.
விண்வெளி அறிஞர், ஆன்மீகவாதி, தீர்க்கதரிசி என்று அறியப்பட்ட இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த நூலில் எப்போது என்னென்ன நடக்கும் என்று விலாவரியாக குறிப்பிட்டுள்ளாராம். உலகின் முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் இவர் இலைமறைகாயாக குறிப்பிட்டுள்ளார்.
"சிவப்பு எதிரி" என்று நாஸ்ட்ராடாமஸ் சீனாவையும் நாட்டின் சிவப்புக் கொடியையும் குறிப்பிடுவதாக நியூயார்க் போஸ்ட் கூறி உள்ளது. "கடற்படை போர்" தைவான் தீவுடனான சீனாவின் பதட்டங்களை, மோதல்களை சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.
அரச பிரச்சனை: நாஸ்ட்ராடாமஸின் ஒரு பத்தியில் "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" என்று கூறுகிறது. அவர் மூன்றாம் சார்லஸ் அரசரைக் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள். சார்லஸ் மன்னரைப் பற்றி ஒரு பத்தியில், "விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் நடக்கும். அது முடிந்த பின் ஒரு புதிய ராஜா பதவி ஏற்பார். அவர் நீண்ட காலம் பூமியை பாதுகாப்பார்.
உலகம் விரைவில் போப் பிரான்சிஸுக்கு மாற்றாக புதிய போப்பை தேர்வு செய்யும்.."மிகவும் வயதான போப்பாண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார், அவர் மென்மையானவர். அதே சமயம் நீண்ட காலம் பதவியில் இருப்பார்.
கண்டிப்பாக உலகப்போர் ஏற்படும். காலநிலை நெருக்கடி சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில், இது இன்னும் மோசமாகிவிடும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்புகளில் இருந்து ஒரு பத்தியில், "வறண்ட பூமி மேலும் வறண்டு வளரும், அதன் விளைவாக பெரும் வெள்ளம் ஏற்படும்.". உலகில் இன்னும் பல நாடுகளில் வெள்ளம், காட்டுத்தீ ஏற்படும். அது பஞ்சத்திற்கு வழி வகுக்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை கட்டுபடுத்த தொடங்கும். மனிதர்கள் கணினிகள் மூலம் கட்டுப்படுத்தப்படுவார்கள். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்று அவர் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார், என்று கூறி உள்ளார்.
போர்; இப்படிப்பட்ட நிலையில்தான் மூன்றாம் உலகப் போர்.. அணு ஆயுத போராக மாறும்.. இது பேரழிவை ஏற்படுத்தும் என சிட்னியில் உள்ள பிரபல பிஷப் மார் மாரி இம்மானுவேல் கணிப்பை வெளியிட்டு உள்ளார். நவீன யுகத்தில் இவரின் கணிப்புகள் பல உண்மையாக மாறுவதாக அவரின் பின்தொடர்பாளர்கள் இடையே நம்பிக்கை உள்ளது.
இந்த போர் காரணமாக பலர் மரணம் அடைவார்கள். மூன்றாம் உலகப் போர் பெரும் அழிவை ஏற்படுத்தும். உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் அழிக்கப்படுவார்கள், மேலும் உயிர் பிழைத்த மூன்றில் இரண்டு பங்கு தாங்கள் ஏன் சாகவில்லை என்று வருந்துவார்கள். மொத்த பூமியும் காந்தமாக மாறும். அணு ஆயுதங்கள் வெறும் காட்சிக்காக மட்டும் அல்லாமல் இந்த முறை கண்டிப்பாக பயன்படுத்தப்படும், இது மனித வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் நேரமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications