ஹேக் செய்யப்பட்டது ஃபேஸ்புக் சிஇஓ ஜக்கர்பர்கின் ட்விட்டர், பின்இன்டரஸ்ட் கணக்குகள்
நியூயார்க்: ஃபேஸ்புக் நிறுவன சிஇஓ மார்க் ஜக்கர்பர்கின் ட்விட்டர் மற்றும் பின்இன்டரஸ்ட் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓவான மார்க் ஜக்கர்பர்கின் ட்விட்டர் மற்றும் பின்இன்டரஸ்ட் கணக்குகள் ஞாயிற்றுக்கிழமை ஹேக் செய்யப்பட்டது. அந்த கணக்குகளை தாங்கள் தான் ஹேக் செய்ததாக அவர்மைன் டீன்(OurMine Team)என்ற ஹேக்கர் குழு ட்விட்டரில் தெரிவித்தது.

இதையடுத்து அந்த குழுவின் ட்விட்டர் கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஜக்கர்பர்கின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் ஹேக் செய்ததாக தெரிவித்தது. ஆனால் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என ஃபேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஜக்கர்பர்க் தனது ட்விட்டர் மற்றும் பின்இன்டரஸ்ட் கணக்கிற்கு "dadada" என்பதையே பாஸ்வேர்டாக வைத்திருந்ததாக அந்த ஹேக்கர் குழு தெரிவித்துள்ளது. அந்த குழு ஜக்கர்பர்கின் கணக்கில் போட்ட ட்வீட்டுகளை ட்விட்டர் நிர்வாகம் நீக்கிவிட்டது.
கடந்த 2012ம் ஆண்டு 117 மில்லியன் பேரின் லிங்க்ட்இன் யூஸர்நேம் மற்றும் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டதாக கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது. அதன் மூலம் தான் ஹேக்கர் குழுவுக்கு ஜக்கர்பர்கின் பாஸ்வேர்ட் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications