மெச்சிகோவில்... கள்ளக்காதலியை சந்திக்க... அவரது வீட்டின் படுக்கையறை வரை... சுரங்கப்பாதை அமைத்த நபர்!
மெக்சிகோ சிட்டி: மெக்ஸிகோவில் கள்ளகாதலியின் வீட்டிற்கு, தனது வீட்டிலிருந்து சுரங்கப்பாதை அமைத்த திருமணமான நபர், கள்ளகாதலியின் கணவரால் கையும், களவுமாக பிடிபட்டார்.
ஒருநாள் வழக்கத்தை விட முன்னதாகவே ஜார்ஜ் வீட்டிற்கு வந்தபோது கள்ளகாதலர்கள் வசமாக சிக்கிக் கொண்டனர்.
ஆல்பர்டோ அமைத்த சுரங்கப்பாதையின் அளவு மற்றும் நீளம் தெரியவில்லை. ஆனாலும் அதன் நுழைவாயிலின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

கள்ளக்காதல் மோசமானது
காதல் என்னும் புனிதமான உணர்வை கெடுக்க வந்திருக்கிறது கள்ளக்காதல் என்னும் மோசமான போதை. மது போதையில் மூழ்கியவர்கள் கூட அதில் இருக்கும் பேராபத்தை கண்டு திருந்தி விடுவர். ஆனால் அடுத்தவர் மனைவி மீதும், கணவர் மீதும் கள்ளக்காதல் கொண்டவர்கள் ஏதாவது ஒரு வகையில் அதற்கான கெடு பலன்களை அனுபவித்தே தீருவார்கள்.

கையும், களவுமாக பிடிபடுவார்கள்
நமது நாட்டில் தற்போது கள்ளக்காதல் சகஜமாகிவிட்டது. கள்ளக்காதல் காரணாமாக நடைபெறும் கொலைகள், குடும்ப சீரழிவுகளை நாம் பார்த்து வருகிறோம்.இந்தியாவில் தங்களது கள்ளக்காதலன்/கள்ளக்காதலியை ரிஸ்க் எடுத்து ரகசியமாக சந்திப்பவர்கள் அவர்களது குடும்பத்தினரால் கையும், களவுமாக மாட்டிக்கொள்ளும் சம்பவத்தை கேள்விபட்டு இருக்கிறோம். இதேபோல் வெளிநாட்டிலும் கள்ளக்காதலியை பார்க்க ஒருவர் செய்த வித்தியாசமான செயலை பாருங்கள்.

கள்ளக்காதல் மலர்ந்தது
மெக்ஸிகோ நாட்டை சேர்ந்தவர் ஆல்பர்டோ கட்டுமானத் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் திருமணம் செய்வதற்கு முன் பமீலா என்ற பெண்ணை காதலித்து உள்ளார். ஆனால் இந்த காதல் கைகூடாததால் பமீலா வேறு ஒருவரை திருமணம் செய்தார்.பமீலா, டெல் பிராடோவின் டிஜுவானா பகுதியில் ஆல்பர்டோ வீட்டின் அருகில் வசித்துவருகிறார். ஆனால் அதன்பின்னர் இருவருக்கும் இடையே கள்ளகாதல் மலர்ந்தது.

சுரங்கப்பாதை அமைத்தார்
காதலியின் சாரி கள்ளகாதலியின் வீட்டுக்கு வாசல் வழியாக வருவது ரிஸ்க் என்பதால், ஆல்பர்டோ, கள்ளகாதலியின் வீட்டுக்கு செல்வதற்கு தன் வீட்டிலிருந்து ஒரு நீண்ட சுரங்கத்தை தோண்டினார். கள்ளகாதலியின் கணவர் இல்லாத சமயத்தில் ஆல்பர்டோ இந்த சுரங்கப்பாதை வழியாக கள்ளக்காதலியை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த கள்ளகாதல் ஜோடி யாருக்கும் தெரியாமல் தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.

கையும், களவுமாக சிக்கினார்கள்
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல் இருவரும் ஒரு நாள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர். அதாவது ஒருநாள் பமீலாவின் கணவர் ஜார்ஜ் வழக்கத்தை விட முன்னதாகவே வீட்டிற்கு வந்தபோது இருவரும் சிக்கினர். ஜார்ஜ் வந்ததும் ஆல்பர்டோ ஒரு சோபாவின் பின்னால் மறைந்து கொண்டார். அந்த இடத்தில் அவரை தேடியபோது தனது வீட்டின் படுக்கைக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை துளை இருப்பதைக் கவனித்தார். ஜார்ஜ் அந்த சுரங்கப்பாதை வழியாக சென்றபோது, அது சரியாக ஆல்பர்டோவின் வீட்டில் சென்று முடிந்தது.

வெளி உலகுக்கு தெரிந்தது
இதனால் ஜார்ஜ் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தனது மனைவியிடம் சொல்ல வேண்டாம் ஆல்பர்டோ, ஜார்ஜிடம் கெஞ்சி கூத்தாடினார். ஆனால் ஜார்ஜ் இதனை அந்த பெண்ணிடம் தெரிவித்து விட்டார். பின்னர் இந்த விவகாரம் போலீசார் வரை சென்றதால் வெளி உலகுக்கு தெரியவந்தது.
ஆல்பர்டோ அமைத்த சுரங்கப்பாதையின் அளவு மற்றும் நீளம் உள்ளூர் ஊடகங்களால் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், நுழைவாயிலின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications