Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஸ்டன்” ஆன பாஜகவினர்.. நம்ம கட்சிலயே இப்டியா? மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என மேகாலயா தலைவர் ஓபன் டாக்

தான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக மேகாலயா மாநில பாஜக தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி தெரிவித்து உள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஷில்லாங்: பாரதிய ஜனதா கட்சியில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை என்றும், தானும் மாட்டிறைச்சி சாப்பிட்டு வருவதாகவும் மேகாலயா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி தெரிவித்து உள்ளார். பாஜகவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

மேகாலயா மாநில பாஜக தலைவராக இருப்பவர் எர்னஸ்ட் மாவ்ரி. தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இவர், "மேகாலயாவில் அனைத்து தரப்பும் மாட்டிறைச்சி சாப்பிட்டு வருகிறார்கள்.

நானும் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன். எங்களின் சொந்த உணவு பழக்க வழக்கங்களையே நாங்கள் கடைபிடித்து வருகிறோம். அதை பின்பற்றுவதற்கு எந்த தடையும் கிடையாது.

பாஜக சாதி, மதம் பார்க்காது

பாஜக சாதி, மதம் பார்க்காது

யாராலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதை தடுக்க முடியாது. எதை சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்ற எந்த விதமான கட்டுப்பாடுகளும் எங்களுக்கு இல்லை. சாதி, மதம், பழக்க வழக்கங்கள் சார்ந்து பாஜக எந்த காரணத்தை கொண்டு யோசிக்காது. பாஜக ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து என்னால் பேச முடியாது.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி இல்லை

கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி இல்லை

நாங்கள் இருப்பது மேகாலயா. இங்குள்ள கலாச்சார முறையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். இந்த மாநிலத்தில் பெரிய அளவிலான கறிக்கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளில் மாட்டுக் கறி, பன்றி இறைச்சி ஆகியவை சுதந்திரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ மக்களுக்கு எதிரானது பாஜக என்று சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள்.

தேவாலயங்கள் இடிக்கப்படவில்லை

தேவாலயங்கள் இடிக்கப்படவில்லை

இந்த விமர்சனங்கள் அனைத்துமே வெற்று அரசியல் பிரச்சாரம்தான். 9 ஆண்டுகளாக இந்தியாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. எந்த ஒரு தேவாலயமும் இந்த நாட்டில் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. மேகாலயா கிறிஸ்தவர்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலம். இங்குள்ள தேவாலயங்களுக்கு அனைவருமே வருகிறார்கள்.

பொய் பிரச்சாரம்

பொய் பிரச்சாரம்

கோவா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் கிறிஸ்தவ மக்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த மாநிலங்களிலும் ஒரு தேவாலயம் கூட இதுவரை தாக்கப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பாஜக கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்தை பரப்பி வருகின்றன. ஆனால், அவை எல்லாம் பொய்யான பிரச்சாரம்.

நானும் கிறிஸ்தவன்

நானும் கிறிஸ்தவன்

நானும் ஒரு கிறிஸ்தவன் தான். நான் தேவாலயத்துக்கு செல்லக்கூடாது என்று யாருமே என்னிடம் கூறியது கிடையாது. மக்கள் மேகாலயா மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இந்த தேர்தலில் பாஜக ஆட்சியமைக்கும்." என்றார். பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவுக்காக ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையில் பாஜக தலைவரின் இந்த பேச்சு விவாதப் பொருளாகி உள்ளது.

மேகாலயா தேர்தல்

மேகாலயா தேர்தல்

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் வரும் 27 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கூட்டணி உடைந்தது. எனவே பாஜக இதில் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், திரிணாமூல் கட்சிகளும் தனித்து இந்த தேர்தலில் களம் காண்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+