அயோத்தி கும்பாபிஷேகம் இருக்கட்டும்.. மற்றொரு இடத்தில் திறக்கப்பட்ட ராமர் கோயில்.. இது ஏன் முக்கியம்
மெக்சிகோ சிட்டி: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், இதே நாளில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவிலும் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்த படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் இப்போது பிரம்மாண்டமான ராமர் கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ராமர் கோயிலில் இன்று பிரதிஷ்டை விழா நடைபெறும் நிலையில், இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பல்வேறு முக்கிய தலைவர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். இதற்கிடையே இன்றைய தினம் அயோத்தி மட்டுமின்றி வேறு ஒரு இடத்திலும் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மெக்சிகோவில் ராமர் கோயில்: இன்று அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், இதே நாளில் வட அமெரிக்க நாடான மெக்சிகோவிலும் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில் உள்ள குரேடாரோ நகரத்தில் முதல் ராமர் கோயில் கட்டப்பட்டது. மெக்சிகோ நாட்டில் கட்டப்பட்ட முதல் ராமர் கோயில் இதுவாகும். இந்த ராமர் கோயிலுக்கு இந்தியாவில் இருந்து சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.

அமெரிக்காவைச் சேர்ந்த அச்சகர் ஒருவர் இந்த கோயிலில் நிறுவப்படும் ராமர் சிலைக்குப் பிரதிஷ்டை செய்தார். அதைத் தொடர்ந்து இந்த ராமர் கோயில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள அப்பகுதியில் இருந்து பல புலம்பெயர்ந்த கலந்து கொண்டர். அவர்கள் ராமர் கோஷங்கள் எழுப்ப ராமர் பாடல்களும் அங்கே ஒலிபரப்பப்பட்டன.
முதல் ராமர் கோயில்: இது குறித்து மெக்சிகோவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், "மெக்சிகோவில் உள்ள முதல் ராமர் கோவில்! அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், மெக்சிகோ குவெரெடாரோ நகரமும் இப்போது ராமர் கோவிலைப் பெறுகிறது. இதே குரேடாரோவில் நகரில் தான் அந்நாட்டின் முதல் அனுமன் கோயிலும் அமைந்துள்ளது.

பிரதிஷ்டா விழாவை அமெரிக்காவைச் சேர்ந்த அர்ச்சகர்கள் நடத்தினர்.. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலைகளுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. புலம்பெயர்ந்த இந்தியர்கள் பாடிய பாடல்கள் மண்டபம் முழுவதும் எதிரொலித்ததால் அந்த இடம் தெய்வீக சக்தியால் நிரம்பியது" என்று பதிவிடப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்: இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலும் இன்று ராமர் கோயில் பிரதிஷ்டை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், துறவிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி சிறப்புப் பூஜைகளைச் செய்தார். இதில் பல்வேறு முக்கிய தலைவர்கள், ஆளுமைகள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவிற்காக லக்னோ நகர் முழுவதும் ராமரின் சுவரொட்டிகள் மற்றும் கொடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன, மேலும், இந்த நிகழ்வைக் காண ஏதுவாக மத்திய அரசு அலுவலகங்கள் அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், பல்வேறு மாநிலங்களும் இதற்காக விடுமுறையை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வைப் பொதுமக்கள் காண நாடு முழுக்க அவை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications