36 குழந்தைகளின் தந்தையின் 4வது கல்யாணத்திற்கு வேட்டு வைத்த பாகிஸ்தான் ராணுவம்!
பன்னு, பாகிஸ்தான்: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தீவிர வேட்டையால் ஒரு 'புரட்சிகர' திருமணம் தடை பட்டுப் போயுள்ளதாம்.
பெரும் வருத்தத்தில் உள்ளார் அந்த 'கல்யாண மாப்பிள்ளை'. மாப்பிள்ளைக்கு வயது 'ஜஸ்ட்' 54 தான் ஆகிறது. இவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் உள்ளனர். 4வது கல்யாணத்துக்குத் திட்டமிட்டு வந்தார் இந்த நபர்.
இவருக்கு தற்போது 3 மனைவிகள் மூலம் 36 பிள்ளைகள் உள்ளனர் என்பது கொசுருத் தகவல். தனது 4வது கல்யாணக் கணவை பாகிஸ்தான் ராணுவம் பாழடித்து விட்டதாக கடுப்பாக கூறுகிறார் குல்ஸார் கான் என்ற பெயருடைய இந்த நபர்.

வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து
ராணுவத்தின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் தாக்குதல் காரணமாக குல்ஸார் கான் உள்பட பல ஆயிரக்கணக்கனோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

35 ரூம் கொண்ட வீடு போச்சு
வசிரிஸ்தானின் ஷாவா கிராமத்தில் குல்ஸார் கானுக்குச் சொந்தமான பெரிய வீடு உள்ளது. அதில் 35 அறைகள் உள்ளதாம். குடும்பத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆகும். 3 மனைவிகள், குழந்தைகள்,
பேரக்குழந்தைகள் இதில் அடக்கம்.

கல்யாணத்திற்குச் சேர்த்த காசு போச்சே
4வது கல்யாணத்திற்காக இவர் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து வந்தாராம். ஆனால் ராணுவ நடவடிக்கையால் இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்தக் காசையெல்லாம் போக்குவரத்து செலவுக்கே செலவிட வேண்டி வந்ததாம்.

ஷாவா டூ பன்னு
ஷாவா கிராமத்திலிருந்து தற்போது பன்னு என்ற ஊரில் இடம் பெயர்ந்து வசித்து வருகிறார் குல்ஸார் கான். தற்போது மறுபடியும் கல்யாணத்திற்காக காசு சேர்த்து வருகிறாராம். சண்டை முடிந்ததும் 4வது திருமணம் செய்ய உத்தேசித்துள்ளாராம்.

4 மனைவிகளுக்கு சட்டப்படி அனுமதி
பாகிஸ்தானில் ஒருவர் நான்கு மனைவிகள் வரை மணந்து கொள்ள அந்த நாட்டுச் சட்டம் அனுமதிக்கிறது.

போதும்ய்யா ராசா...
ஆனால் குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று ஆகி விட்டது. இதற்கு மேலும் திருமணம் தேவையா, போதும் நிறுத்திக்குங்க என்று இவரது 3 மனைவிகளும் கூறி வருகிறார்களாம்.

பக்கத்துலேயே வராதீங்க
அத்தோடு நில்லாமல் தங்களுக்கு அருகிலும் குல்ஸாரை நெருங்க விடுவதில்லையாம். இனியும் பிள்ளை பெற்றுக் கொடுக்க எங்களால் முடியாது என்று கூறி விட்டார்களாம். ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. எனது ஆசையை நான் நிறைவேற்றியாக வேண்டும். எனவேதான் 4வது திருமணத்திற்குத் திட்டமிட்டு வருகிறேன் என்று கூறுகிறார் குல்ஸார்.

17 வயதில் முதல் திருமணம்
குல்ஸாருக்கு 17 வயதாக இருந்தபோது 14 வயது சிறுமியை முதல் மணம் புரிந்தார். அவர்களுக்கு எட்டு மகள்களும், நான்கு மகன்களும் உள்ளனர். எட்டு வருடம் கழித்து 17 வயது சிறுமியை மணந்தார்.

3வது மனைவி
பின்னர் தனது சகோதரரின் விதவை மனைவியை 3வதாக மணந்து கொண்டார்.

மகன்கள் உதவுகிறார்கள்
குல்ஸாரின் இரு மகன்கள் துபாயில் டிரைவர்களாக உள்ளனர். அவர்கள் பணம் அனுப்புகிறார்களாம். அதை வைத்தும், குல்ஸார் சம்பாதிப்பதை வைத்தும் குடும்பம் ஓடுகிறதாம்.

நீ யாரு மகன்டா மகனே
எனது 3 மனைவியரும் ஒற்றுமையுடன் ஒரே வீட்டில் உள்ளனர். எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் எனக்குத்தான் எனது மகன்கள் எந்த மனைவிக்குப் பிறந்தவர்கள் என்பது சரியாக தெரியாமல் போய் விடும். ஓரளவுக்குச் சொல்லி விடுவேன். ஆனால் அனைவரது தாயாரும் யார் என்பது எனக்கு முழுமையாக தெரியாது என்று கூறிச் சிரிக்கிறார் குல்ஸார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications