மாலவி நாட்டு துணை அதிபரின் விமானம் திடீர் மாயம்.. 10 பேரின் கதி என்ன? பரபர தகவல்
லிலோங்வி: மாலவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்பட 10 பேருடன் சென்ற ராணுவ விமானம் திடீரென்று மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணி நடந்து வரும் நிலையில் அதுபற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்கிழக்கு ஆப்ரிக்க நாடாக மாலவி உள்ளது. இந்த நாட்டின் அதிபராக லாசரஸ் சக்வீரா என்பவர் உள்ளார். துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா இருக்கிறார்.

இந்நிலையில் தான் நேற்று சவ்லோஸ் சிலிமா மேலும் 9 பேருடன் ராணுவ விமானத்தில் பயணம் செய்தார். மாலவி நாட்டின் தலைநகரான லிலோங்வியில் இருந்து அவர்கள் 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸுஸு சர்வதேச விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நிமிடத்தில் திடீரென்று மாயமானது. அதாவது அந்த விமானம் தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரேடாரின் தொடர்பில் இருந்து விலகியது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிக்கு உத்தரவிடப்பட்டது. விமானத்தை தேடும் பணியில் விமானப்படை மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் தற்போது வரை விமானம் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. இதனால் விமானத்தில் பயணித்த துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்பட 10 பேரின் கதி என்ன ? என்பது தெரியவில்லை. இதற்கிடையே இந்த விமானத்தில் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உள்ளிட்டவர்கள் எங்கு சென்றனர்? என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின்போது இன்னொரு சோகமான தகவல் வெளியானது. அதாவத முன்னாள் அமைச்சர் ஒருவரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சவ்லோஸ் சிலிமா உள்ளிட்டவர்கள் ராணுவ விமானத்தில் பயணம் செய்தனர். இந்த வேளையில் மோசமான வானிலை நிலவியதாகவும், இதனால் விமானம் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications