மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை வரை நீட்டிப்பு
கோலாலம்பூர்: காணாமல் போன மலேசியா விமானத்தை தேடும் பணி சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி.மீட்டர் தொலைவு வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று மலேசியாவில் இருந்து பெய்ஜிங் புறப்பட்ட மலேசிய விமானம் மாயமாகி இன்றுடன் 8 நாட்களாகி விட்டன. 239 பேருடன் வானில் பறந்த அந்த விமானத்தின் கதி என்ன ஆனது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்த விமானம் மாயமான பிறகு தொடர்ந்து 4 மணி நேரம் செயற்கை கோளுக்கு சிக்னல்களை அனுப்பி உள்ளது. இதை தெரிவித்த அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், "மாயமான மலேசிய போயிங் 777-200 விமானம், செயற்கைக் கோளுக்கு சிக்னல்களை அனுப்பியது. ஆனால் தகவல்கள் அனுப்பவில்லை" என்றனர்.
இந்தியப்பெருங்கடல் பகுதியில்
இந்த நிலையில் மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் தேட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் அடிமட்டத்தில் அந்த விமானம் சிக்கி இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்தான், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளதாக அமெரிக்க ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறை வல்லுனர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அந்தமான் கடல் பகுதியில்
மலாக்கா ஜலசந்திக்கு மேற்கே அந்தமான் கடல் பகுதியில் இந்த விமானத்தை தேடும் பணியில், இந்தியாவுடன் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி-3சி ஆரியன் கண்காணிப்பு விமானம் ஈடுபட உள்ளது.
சென்னை கடற்கரை வரை
இந்த நிலையில், மலேசிய விமானத்தை தேடும் பணி சென்னை கடற்கரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியா அரசின் வேண்டுகோளை அடுத்து வங்காள விரிகுடா கடல் பகுதியிலும் தேடுதல் பணியை இந்தியா தொடங்கியுள்ளது.
வங்காள விரிகுடா பகுதியில்
மலேசிய அரசின் வேண்டுகோளை அடுத்து, இந்தியா 9,000 சதுர கிலோமீட்டர் வங்காள விரிகுடா கடல்பகுதியில் தேடும் பணியை விரிவுபடுத்தியுள்ளது. சென்னை கடலிலில் இருந்து சுமார் 300 கி மீட்டர் தொலைவு வரை தேடும் பணி விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications