இது மார்ஸ் லெவல் திட்டம்.. செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்பும் நாசா!
செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது.
Recommended Video

நியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு ''மார்ஸ்பீஸ்'' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் தேனீக்கள் அனுப்பப்பட உள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு நாசா ரோவர் அனுப்பி உள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனம் ஆகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக நகர்ந்து இது ஆய்வு செய்யும். இதனால் தற்போது ரோபோ தேனீக்களை பயன்படுத்த நாசா முடிவு செய்துள்ளது.

என்ன பிரச்சனை
இதன் வேகம்தான், இதன் பிரச்சனை, இது தகவல்களை அனுப்ப பூமிக்கு அதிக நேரம் பிடிக்கிறது. அதே சமயம் இது நகர அதிக எரிபொருள் எடுத்துக் கொள்கிறது. மேலும் சமயங்களில் ரோவர் அனுப்பும் தகவல்கள் சரியாக இருப்பதில்லை. இதனால் இதை கைவிட முடிவு செய்துள்ளனர்.

தேனீ
இதற்காகத்தான் தற்போது ரோபோட் தேனீக்களை அனுப்புகிறார்கள். இந்த தேனீக்கள் 4 லிருந்து 3 சென்டிமீட்டர் வரைதான் அளவு இருக்கும். இந்த நேனோ தேனீதான் செவ்வாய் கிரகத்தை வலம்வர உள்ளது. இதில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனியிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்கு பறக்க வைக்கலாம்.

செவ்வாயில் பறக்கும்
இது செவ்வாய் கிரகத்தில் எளிதாக பறக்கும். இங்கு இருப்பதை விட அங்கு ஈர்ப்பு விசை குறைவு. இதனால் இதன் பறக்கும் வேகமும், முறையும் எளிதாக இருக்கும். இதனால் இதை வைத்து ஆராய்ச்சி செய்வதும் மிகவும் எளிதாகும். அதேபோல் அங்கு மிகவும் குறைந்த அளவில் காற்று வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

வசதி
20 க்கும் மேற்பட்ட ரோபோ தேனீக்களை இப்படி அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. இந்த தேனீக்கள் கொஞ்ச நேரத்திற்குத்தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ரோவர் ஒன்றை அனுப்புவார்கள். அந்த ரோவரை வைத்து எல்லா தேனீக்களையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். ரோவருக்கு ஆகும் எரிபொருள் செலவை விட இதற்கு குறைவாகவே ஆகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications