Nepal: நேபாள நிதி அமைச்சரை தெருவில் ஓட ஓட விரட்டி தாக்கிய போராட்டக்காரர்கள்!
காத்மாண்டு: நேபாளத்தில் (Nepal) சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் நேற்று போராட்டம் வெடித்தது. ஜென் Z தலைமுறையினர் நடத்திய இந்த போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது. போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் 19 பேர் கொல்லப்பட்ட நிலையில், 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நிலைமை கையை மீறி சென்றதால் பிரதமர் பதவியில் இருந்து கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்துள்ளார். இதற்கிடையில் நேபாள நாட்டு நிதி அமைச்சரை போராட்டக்காரர்கள் தெருவில் ஓட ஓட விரட்டி தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்திருக்கும் நேபாளத்தில், சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் திட்டவட்டமாக எதிர்ப்பு எழுந்தது. பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

19 பேர் பலி, 300 பேர் காயம்
இதற்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். தங்களை ஜென் Z தலைமுறை என குறிப்பிடும் அவர்களின் போராட்டத்தில் நேற்று வன்முறை வெடித்தது. தலைநகர் காத்மாண்டு உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், பாராளுமன்ற வளாகத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் பலியானார்கள். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இளைஞர்கள் போராட்டம் காரணமாக சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நேபாள அரசு திரும்ப பெற்றது. தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து முக்கிய சமூக வலைத்தளங்களும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
அதிபரின் இல்லங்களுக்கு தீ வைக்கப்பட்டன
சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்பட்ட போதிலும் இளைஞர்களின் போராட்டம் நீடித்தது. நேபாள பிரதமர் கே.பி. ஒலிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பு ஏற்று கே.பி. சர்மா ஒலி பதவியை விலக வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரினர். நேபாள பிரதமர் மற்றும் அதிபரின் இல்லங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
அதே போல முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் குறிவைத்தனர். அவர்களின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. தகவல் தொடர்பு அமைச்சர் பிருத்வி சுப்பா குருங்கின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டம் காரணமாக தலைநகர் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகர் காத்மாண்டுவில் இளைஞர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.
ஓட ஓட விரட்டி தாக்கும் காட்சிகள்
அவர்கள் தெருக்களில் கூட்டமாக பேரணியாக சென்றனர். கட்டுக்கடங்காத வன்முறையால் நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஹெலிகாப்டர் வாயிலாக அண்டை நாட்டிற்கு தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்த உறுதியான தகவல் தெரியவில்லை.
இதற்கிடையே, நேபாள நாட்டு நிதி அமைச்சரை போராட்டக்காரர்கள் ஓட ஓட விரட்டி தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. நேபாள நிதி அமைச்சர் விஷ்ணு பிரசாத் பவுடேலை போராட்டக்காரர்கள் காத்மாண்டுவில் விரட்டுவதும், அதில் ஒரு போராட்டக்காரர் எட்டி உதைக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் தடுமாறி விழும் அமைச்சர் உடனடியாக எழுந்து அங்கிருந்து ஒட்டம் பிடிக்கிறார். அப்போதும் விடாமல் போராட்டக்காரர்கள் அவரை துரத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உச்சக்கட்ட பதற்றம்
ஊரடங்கு உத்தரவை ஏற்க மறுத்து காத்மாண்டுவில் போராட்டக்காரர்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருவதால் நேபாளம் முழுவதும் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. நேபாள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்தியாவும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications