நிலநடுக்கம் புரட்டிப் போட்ட நேபாளத்தில் கடும் நிலச்சரிவு...உயிரோடு புதையுண்டு 30 பேர் மாண்ட சோகம்
காத்மண்டு : நிலநடுக்கம் உருக்குலைத்த நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும் ஏராளமானோர் மாயமானதால், பலி எண்ணிக் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பிரம்மாண்ட கட்டடங்களும் தரைமட்டமாகி சுமார் 7 ஆயிரத்திக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதன் சோக வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில், காத்மண்டு நகரில் கடும் நிலச்சரிவில் ஏற்பட்டது. நள்ளிரவில் பெய்த கடும் மழை இரண்டு கிராமங்களை அழித்துவிட்டது. இதனால் காத்மாண்டுவின் மேற்கே 127 கி.மீ. தொலைவில் உள்ள போக்காரா உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழையின் தொடர்ச்சியாக நேற்று (29-07-2015) நள்ளிரவில் அங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சுமார் 30 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலரைக் காணவில்லை. இதில் 22 வீடுகள் சேதமடைந்ததாக அந்நாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லஷ்மி தக்கல் தெரிவித்தார்.
ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மழை பெய்யும் பருவம் என்பதால் அங்கே கடும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராணுவ வீரர்களும், போலீசாரும் புதையுண்ட மக்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மீட்புப் பணிகளில் நேபாள அரசு மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications