மிக மோசமானது.. வியட்நாமில் பரவும் கொரோனா வேரியண்ட் பிற நாடுகளையும் தாக்கும்.. வல்லுநர்கள் வார்னிங்
ஹானோய்: வியட்நாமில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலக அளவில் அச்சத்தையும், புதிய கொரோனா கேஸ்களையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஆசிய நாடுகள் இந்த புதிய வேரியண்ட் காரணமாக கண்டிப்பாக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Recommended Video
கொரோனா வைரஸ் தோன்றிய காலத்தில் இருந்து வேகமாக உருமாறிக்கொண்டே இருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும் போது வேகமாக கொரோனா வைரஸ் மியூட்டேட் ஆகி, உருமாற்றம் அடைந்து வருகிறது. இதுவரை பல நூறு முறை கொரோனா வைரஸ் மியூட்டேட் ஆகிவிட்டது.
ஆனால் இப்படி மியூட்டேட் ஆகிய வைரஸ் எல்லாம் மக்கள் இடையே வேகமாக பரவுவது இல்லை, ஒரு சில வலிமையான வேரியண்ட் மட்டுமே மக்கள் இடையே அதிகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. ஒரு சில வேரியண்ட் மட்டுமே அதிக ஆபத்து கொண்டதாக இருக்கிறது.

எப்படி
அந்த வகையில் தற்போது வியட்நாமில் பரவி வரும் புதிய வகை வைரஸ் அதிக பாதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா உருமாறிய வைரஸ் கடந்த வாரம் வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஜீனோம் ஆராய்ச்சி இன்னும் முழுதாக செய்து முடிக்கப்படவில்லை. இந்த நிலையில் வியட்நாமில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிக ஆபத்து கொண்டது என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏன் ஆபத்து
இந்தியாவில் பரவிய b1.617 என்று அழைக்கப்படும் கொரோனா வகை, யுகேவில் பரவிய b117 வகை இரண்டும் ஒன்றாக சேர்ந்து உருவான புதிய வகை ஹைபிரிட் வேரியண்ட்தான் இந்த புதிய வியட்நாம் வகை கொரோனா என்று கூறப்படுகிறது. அதாவது ஆல்பா வகை கொரோனா, டெல்டா வகை கொரோனா இணைந்து இந்த புதிய வகை ஹைப்ரிட் கொரோனா உருவாகி உள்ளது. இதுதான் அதிக ஆபத்து கொண்டது ஆகும்.

சிக்கல்
இந்த வைரஸ் இப்போது வியட்நாமில் மட்டுமே பரவி வருவதால், இதை ஆபத்தான வைரஸ் என்று இன்னும் உலக சுகாதார மையம் கூறவில்லை. இதனால் இன்னும் இந்த கொரோனா வைரஸ் வைகைக்கு பெயர் வைக்கப்படவில்லை. ஆனால் இந்த வைரஸ் மிக மோசமானது, வேகமாக காற்றில் பரவுகிறது, உடலுக்குள் வேகமாக பிரதி எடுக்கிறது என்று வியட்நாம் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை
இந்த வைரஸ் வியட்நாம் மட்டுமின்றி மற்ற அண்டை நாடுகளுக்கும் வேகமாக பரவலாம், ஆசியாவில் வேகமாக பரவலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வலிமை கொண்டதாக இருப்பதால் மற்ற வேரியண்ட்களை விட வேகமாக மற்ற நாடுகளுக்கு பரவும் என்கிறார்கள். எப்படி டெல்டா மற்றும் ஆல்பா வேரியண்ட் வகை கொரோனா வைரஸ் உலகில் பல நாடுகளுக்கு பரவியதோ அதேபோல் இதுவும் பரவும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிக்கல்
ஆனால் இந்த புதிய வகை குறித்து உலக நாடுகள் இன்னும் பெரிதாக கவலை கொள்ளாமல் இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. உதாரணமாக தற்போது வியட்நாம் நாட்டில் இந்த வைரஸ் வேகமாக பரவி வந்தாலும், வியட்நாம் இன்னும் யுகே மற்றும் அமெரிக்காவின் ரெட் லிஸ்டில் இல்லை. இதனால் வியட்நாமில் இருந்து ஒருவர் யுகே சென்றால் அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டியது இல்லை. இதனால் வியட்நாம் பயணி எளிதாக யுகேவில் இந்த புதிய வகை கொரோனாவை பரப்ப முடியும்.

தொடக்கம்
இதுதான் இருப்பதிலேயே அதிக ரிஸ்க் ஆன கொரோனா வேரியண்ட் என்று என்று வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால் இது தொண்டையில் அதிக அளவில் அடர்த்தியாக தாக்குகிறதாம். இதற்கு முன் கொரோனா இவ்வளவு அடர்த்தியாக ஒரே இடத்தில் தாக்கியது இல்லை என்கிறார்கள். இதுதான் இதன் மீதான அச்சத்தை அதிகம் ஆக்கியுள்ளது. வேக்சினுக்கு எதிராக இது எப்படி செயல்படும் என்பதும் இன்னும் முழுதாக தெரியவில்லை.

அச்சம்
ஆனால் இந்த வைரஸ் இப்போதுதான் பரவ தொடங்கி உள்ளதால் இதை உலக சுகாதார மையமும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அசட்டையாக இருக்கிறது. இதனால் உலக அளவில் புதிய கொரோனாஅலையை இது ஏற்படுத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இரண்டாம் அலை பல நாடுகளில் கொஞ்சம் குறைந்துள்ள நிலையில் இது மூன்றாம் அலையை உருவாக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications