Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைரல் வீடியோ..! பிரஸ் மீட்டின்போது திடீர் நிலநடுக்கம்.. அப்போதும் அசராத பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

Subscribe to Oneindia Tamil

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் செய்தியாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், பதற்றம் அடையாமல் அதை அவர் கூலாக கையாண்ட விதம் வைரலாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக உள்ளவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்திருந்தார்.

அந்நாட்டு மக்களிடையே தொடர்ந்து செல்வாக்கு உள்ள நபராக இருக்கும் ஜெசிந்தா ஆர்டெர்ன், நிலநடுக்கத்தின் போதும் அசராமல் அதை கூலாக கையாண்ட விதம் வைரலாகியுள்ளது.

நியூசிலாந்து

நியூசிலாந்து

உலகில் எந்த நாட்டிலும் இதுவரை கொரோனா பாதிப்பு முழுமையாக ஒழிக்கப்படவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த வேக்சின் பணிகள், தீவிர ஊரடங்கு என பல்வேறு நாடுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் வடக்கே உள்ள குட்டி தீவு நாடான நியூசிலாந்து கொரோனா பாதிப்பு மிகச் சிறப்பாகக் கையாண்டது. கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையின்போதும் சரி, இந்த ஆண்டு ஏற்பட்ட 2ஆம் அலையின்போது சரி அந்நாட்டு அரசு மிகச் சரியான நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் வைரஸ் பாதிப்பு அங்கு எந்தச் சூழலிலும் கையை மீறிச் செல்லவில்லை.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

அரசின் தீவிர நடவடிக்கைகளால் இதுவரை அங்கு 5,554 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 30க்கும் குறைவான கொரோனா உயிரிழப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கொரோனாவுக்கு பிந்தைய நிலை குறித்தும் அப்போது அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடம் விளக்கும் வகையிலான நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

திடீர் நிலநடுக்கம்

திடீர் நிலநடுக்கம்

அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வெல்லிங்கடன் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான் என்றாலும் கூட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்தவர்கள் எல்லாம் சற்று பதறிவிட்டனர். இருந்தாலும் அப்போதும் பதற்றமடையாத ஜெசிந்தா ஆர்டெர்ன் கூலாகவே இருந்தார். செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் போது, திடீரென இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

'ஓ சாரி'

'ஓ சாரி'

அப்போது சிரித்துக் கொண்டே ஜெசிந்தா ஆர்டெர்ன், "ஓ, சாரி.. சிறிய பிரச்சினை.. கேள்வியை மீண்டும் சொல்லுங்களேன்?" என்று கேட்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜெசிந்தா ஆர்டெர்ன் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்படவே, அதையும் இதேபோலத் தான் கையாண்டு இருப்பார்.

நியூசிலாந்தும் நிலநடுக்கமும்

நியூசிலாந்தும் நிலநடுக்கமும்

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9ஆகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்புகள் எதுவும் இல்லை என்றே முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிங் ஆஃப் பயர் என்ற நியூசிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். கிறிஸ்ட்சர்ச் நகரத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது, அதில் சுமார் 185 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல அங்கு தெற்கு பகுதியில் உள்ள கைகூரா என்ற நகரில் 2016இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொதுச் சொத்துகள் நாசமடைந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+