ஆக்லாந்தில் மீண்டும் கொரோனா.. நியூஸிலாந்து நாடாளுமன்றத் தேர்தல் அக்டோபருக்கு ஒத்திவைப்பு
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் ஆக்லாந்தில் புதிதாக கொரோனா பரவி வருவதை அடுத்து அந்நாட்டு தேர்தலை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.
நியூஸிலாந்து நாட்டின் 52 ஆவது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய போகிறது. சுமார் 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் செப்டம்வர் மாதம் 19-ஆம் தேதி பொது தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

நியூஸிலாந்தில் கொரோனா தொற்று கடந்த 3 மாதங்களுக்கு மேல் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஓக்லாந்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த தேர்தலுக்காக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா, ஓக்லாந்தில் தனது தேர்தல் பிரசாரத்தை இந்த மாதம் தொடங்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா மீண்டும் பரவியுள்ளதால் தேர்தலை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி அதாவது 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் மீண்டும் தன்னை பிரதமராக்கும் என ஜெசிந்தா நம்புகிறார்.












Click it and Unblock the Notifications