அமெரிக்கா: 9 மாத தம்பியை தலையில் சுட்டுக் கொன்ற 5 வயது சிறுவன்
மிசோரி: அமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது தாத்தாவின் துப்பாக்கியை வைத்து விளையாடுகையில் குண்டுவெடித்து அவரின் தம்பியான 9 மாத குழந்தை பலியானது.
அமெரிக்காவில் உள்ள மிசௌரி மாநிலத்தில் இருக்கும் நோடவே கவுன்ட்டியைச் சேர்ந்த பெண் அலெக்சிஸ் வீடெர்ஹோல்ட். அவர் தனது 5 வயது மகன் மற்றும் 9 மாத ஆண் குழந்தையான கார்பினுடன் தனது தந்தையின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கார்பினை படுக்கை அறையில் தூங்க வைத்துவிட்டு வேறு அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது படுக்கையறையில் இருந்த அலெக்சிஸின் தந்தையின் துப்பாக்கியை எடுத்து அந்த 5 வயது சிறுவன் விளையாடியுள்ளார். விளையாடியபோது அவர் கை தவறி சுட்டதில் கார்பினின் தலையில் குண்டு பாய்ந்தது. துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டு ஓடி வந்த அலெக்சிஸிடம் அம்மா, மன்னித்துவிடுங்கள் நான் கார்பினை சுட்டுவிட்டேன் என்று சிறுவன் தெரிவித்துள்ளார்.
அலெக்சிஸ் உடனே குழந்தை கார்பினை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பலியானது.
குழந்தைகள் இருக்கும் வீட்டில் எதற்காக என் தந்தை துப்பாக்கியில் குண்டுகளை போட்டிருந்தார் என தெரியவில்லை என்று அலெக்சிஸ் தெரிவித்தார்.
இது குறித்து அலெக்சிஸின் தந்தை கூறுகையில்,
பாதுகாப்புக்காகவும், துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்காவும் நான் துப்பாக்கியில் குண்டுகள் நிரப்பி அதை ஒரு டப்பாவில் போட்டு பூட்டி வைத்திருந்தேன். அந்த டப்பாவை சாவி அல்லது ஸ்க்ரூடிரைவரால் மட்டுமே திறக்க முடியும் என்றார்.
அமெரிக்காவில் சிறுவர்கள் துப்பாக்கியால் தங்களின் உடன் பிறப்புகளை தெரியாமல் சுட்டுக் கொல்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications