மோடி-நவாஸ் ஷெரீஃப் இடையே அதிகாரப்பூர்வ பேச்சு நடைபெறாது - இந்திய வெளியுறவுத்துறை
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெஃரீப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறாது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். "ஐ.நா.சபையின் நீடித்த வளர்ச்சிக்கான செயல் திட்டம் 2030" குறித்து கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார். அதே போல் பாகிஸ்தான் பிரதர் நவாஸ் ஷெரீஃப் அமெரிக்காவுக்கு செல்கிறார்.

மோடியும், ஷெரீஃப்பும் ஒரே ஹோட்டலில்தான் தங்கவுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர், நவாஸ் ஷெரீஃப்புடன் ஒரே ஹோட்டலில் தங்கும் மோடி, அவரைச் சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்க்க மாட்டார். இருவரும் சந்திக்க நேர்ந்தால் மரியாதை நிமித்தமாக கைகுலுக்கிக் கொள்வார்கள்.
அதேவேளையில், இருவருக்கும் இடையே அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறாது என்று தெரிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி நடைபெறும் ஐ.நா. உயர்நிலைக் கூட்டத்தில் நவாஸ் ஷெரீஃப் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து 30ஆம் தேதி நடைபெறும் பொது சபைக் கூட்டத்தில் ஷெரீஃப் பங்கேற்றுப் பேச உள்ளார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது இரு நாடுகளும் கருத்து மோதல் ஏற்படும் வகையில் பேச வேண்டாம் என்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக அந்த பாகிஸ்தான் பத்திரிகையொன்றில் அண்மையில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.நா.சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போது காஷ்மீர் பிரச்னையை எழுப்ப பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டுத் தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில், இந்தப் பிரச்னையை நவாஸ் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும், காஷ்மீர் விவகாரத்துக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications