இங்கிலாந்தில் மேற்படிப்பு.. வெறும் கானல் நீர்தான்! எச்சரிக்கும் இந்திய மாணவர்கள்
லண்டன்: இங்கிலாந்தில் மேற்படிப்பு படித்து, அங்கேயே செட்டில் ஆகும் நினைப்புடன் நிறைய மாணவர்கள் இங்கு படையெடுக்கின்றனர். ஆனால், வேலை யாருக்கும் கிடைப்பதில்லை. எனவே பட்ட படிப்புக்காகவும், வேலையை தேடிக்கொண்டும் யாரும் இங்கிலாந்துக்கு வராதீர்கள் என்று அங்குள்ள மாணவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக சமீபத்தில் இங்கிலாந்தில் வசிக்கும் ஜான்ஹவி ஜெயின் எனும் இந்திய மாணவி x தளத்தில் பதிவிட்டிருந்தது கவனம் பெற்றிருக்கிறது. இங்கிலாந்து வந்து படித்த தன்னுடைய பேட்ஜில் 90% பேருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சென்று படித்தால் அங்கேயே வேலை கிடைத்துவிடும் என்பது இந்தியர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதற்காக கடனை பெற்று இங்கிலாந்து செல்கிறார்கள். ஆனால் அங்கும் வேலை இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது. "முதுகலை படிப்புக்காக இங்கிலாந்தை ஆப்ஷனாக யாரும் கருத்தில் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பணம் இருக்கும் பார்ட்டி எனில் கவலை வேண்டாம். ஆனால் கடன் வாங்கி வருகிறீர்கள் எனில் அதை செய்யாதீர்கள். பிசினஸ் தொடங்குங்கள். வேறு எதிலாவது முதலீடு செய்யுங்கள்" என்று ஜெயின் கூறியுள்ளார்.
இந்த x பதிவு பரவலாக ஷேராகியுள்ளது. குறைந்தது 2 லட்சம்பேர் இதனை ரீ ஷேர் செய்திருக்கிறார்கள். எனது தோழிகளும் இதைத்தான் கூறியிருக்கிறார்கள். எனவே பாதுகாப்பான முதலீடு பற்றி யோசித்து வருகிறேன் என்று சிலர் கமென்ட் செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த 34 ஆண்டுகளாக வேலை வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த காலாண்டில் 42,000 வேலை வாய்ப்புகள் வெட்டப்பட்டிருக்கின்றன. மொத்த வேலை வாய்ப்புகள் 7,61,000 என குறைந்திருக்கிறது. 18 தொழில்களில் 13 தொழில்கள் வேலை வாய்ப்பு வெட்டு ஏற்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் பட்டப்படிப்புக்கு குறைந்தது 10-15 லட்சம் ரூபாய் செலவாகும். இதுவே முதுகலைக்கு 20-50 லட்சம் வரையும், பிஎச்டி போன்ற படிப்புகளுக்கு 18-30 லட்சமும் செலவாகும். இதில் தங்குமிடம், போக்குவரத்து, உணவு உள்ளிட்ட தேவைகளுக்கு மட்டும் மாதம் 2.5 லட்சம் வரை செலவாகும். எனவே நல்ல பணக்காரர்கள், காசு செலவானால் பிரச்சனையில்லை, ஆனால் இங்கிலாந்தில் படித்தால் மட்டும் போதும் என்று நினைப்பவர்கள் மட்டும் இதற்காக செலவு செய்தால் போதும்.
சாமானிய மக்கள் காசு கட்டி ஏமாற வேண்டாம். இங்கிலாந்தில் படித்தாலும், மாறி வரும் தொழில் சூழலுக்கு ஏற்ப தங்களை பொருத்திக்கொள்ள முடியாத மாணவர்களால் அங்கு வேலை செய்ய முடியாது என்று நிபுணர்களும் கூறுகின்றனர்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications