பட்டுப் புடவை, நகை, மேக்கப்பும் இல்லீங்க... பாட்டியின் காட்டன் புடவையில் அசத்திய மணப்பெண்
திருமணம் என்றாலே மணப்பெண் பட்டுப்புடவை, நகை நட்டுகளால் அலங்காரம் செய்திருக்க வேண்டும் என்ற மரபை வங்கதேச பெண் ஒருவர் மாற்றி காட்டியுள்ளார்.
டாக்கா: திருமணத்தன்று மணப்பெண் பட்டுப்புடவை உடுத்தி, நகைகளை அள்ளி போட்டு இருக்கும் மரபை வங்கதேச மணப்பெண் ஒருவர் மாற்றியுள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்தவர் தஸ்னிம் ஜாரா. ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி அளிக்கும் ஒரு அறக்கட்டளையின் தலைவராவார். இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

வெரி சிம்பிள்
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில் மணப்பெண்ணுக்கான அலங்காரம் இல்லாமல் பட்டுப்புடவை அணியாமல், நகை அணியாமல் ரொம்ப சிம்பிளாக இருந்தார்.

காட்டன் புடவையில்
ஜாரா தனது திருமணத்தின்போது தனது பாட்டியின் காட்டன் புடவையில் காட்சியளித்தார். இதுவரை இப்படி ஒரு நிலையில் எந்த ஒரு மணப்பெண்ணையும் நாம் பார்த்திருக்க மாட்டோம். அலங்காரம், உடை உள்ளிட்டவை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமே தவிர மணப்பெண் அலங்காரம் இல்லாமல் இருக்க மாட்டார். இதுதான் பாரம்பரியம்.

பாரம்பரியத்தை தகர்த்த
அந்த பாரம்பரியத்தை ஜாரா தகர்த்தெறிந்தார். இவரது திருமண புகைப்படம் பதிவேற்றம் செய்த நாளிலேயே தான் அலங்காரம் செய்து கொள்ளாததற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் ஜாரா கூறுகையில், ஏராளமான மேக்கப்புகள், அதிக எடை கொண்ட உடை, ஏராளமான நகைகள் ஆகியவற்றை மணப்பெண் அணியும் ஒரே கோலத்தை பார்த்து பார்த்து எனக்கு பிடிக்கவில்லை.

பொருளாதார நிலையை காட்டாது
இதுபோல் பட்டுப்புடவை, நகை அணிந்தால் மட்டுமே தாங்கள் பொருளாதார ரீதியில் நன்றாக இருக்கிறோம் என்பதை காட்டாது. இது முழுக்க முழுக்க மணப்பெண்ணின் விருப்பத்துக்கு மாறானது. பெண்ணுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்று விரும்பினால் செய்யுங்கள். அதனால் எந்த வித நன்மையும் அந்த பெண்ணுக்கு ஏற்படாது.

கணவர் பச்சைக் கொடி
நான் மணப்பெண் அலங்காரம் எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியபோது எனது குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்தனர். பாரம்பரியத்தை மாற்றக் கூடாது என்றும் கூறினார். இதுகுறித்து என்னை திருமணம் செய்ய இருந்த கேலதிடம் கேட்டதற்கு அவர் எந்த நிபந்தனையுமின்றி ஓகே சொல்லிவிட்டார் என்று அந்த பெண் பதிவிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications