ஆட்டத்தை ஆரம்பித்த வடகொரியா... மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்
சியோல்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாடுகள், ஐ.நா. சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா அரசு தொடர்ந்து அணு ஆயுத சோதனை செய்து வந்தது. இதனால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனையை கைவிடுமாறு வடகொரியாவை, அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

மேலும், உலக நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, அணு ஆயுத கூடங்களை மூடிய வடகொரியா, அமெரிக்க அதிபர் டிரம்புடன் 2 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால், இந்த சந்திபில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, தனது நட்பு நாடான ரஷ்யாவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், பேச்சு நடத்த விரும்பினார். அதன்படி, விளாடிவோஸ்டாக் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, சில வாரங்களுக்கு முன்பு, கிம் ஜாங் உன் சந்தித்து பேசினார்.
அப்போது, கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, வட கொரியாவின் முன்னேற்றம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக கூறப்பட்டது.இதனிடையே, அணு அயுதங்கள் தயாரிப்பு காரணமாக, வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை நீக்குவதற்கு ரஷ்யாவின் ஆதரவைக் கோருவதற்காக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றதாகவும் சொல்லப்பட்டது.
அதே நேரம், தென்கொரியா - வடகொரியா இடையே சமீபத்தில்பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த நிலையில், தோல்வியில் முடிந்தது. சிறிது காலம் ஆயுத சோதனை எதுவும் நடத்தாமல் இருந்த வடகொரியா, சனிக்கிழமை மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதியில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் ஏவுகணைகள் சோதனை நடத்தப்பட்டதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications